For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அண்ணே.. இது உங்களுக்கே ஓவரா இல்ல? ஐபிஎல் ஏலத்தில் பெரிதாக அவமானப்படப் போகும் இந்திய வீரர்!

Recommended Video

IPL 2020: Uthappa fix his bas price as 1.5 crore

கொல்கத்தா : 2020 ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ராபின் உத்தப்பா பெரிய தொகையை தன் ஏல அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளார்.

ஏற்கனவே, அவர் பார்ம் அவுட்டில் இருப்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை தன் அணியில் இருந்து விடுவித்தது.

இந்த நிலையில், அவர் தனக்கு தானே ஏல அடிப்படை விலையாக 1.5 கோடி நிர்ணயம் செய்து அதிர விட்டுள்ளார்.

2019 ஐபிஎல் தொடர்

2019 ஐபிஎல் தொடர்

2019 ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். அந்த தொடரில் 12 போட்டிகளில் ஆடிய அவர் 282 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 31.33.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

சராசரி ஓரளவு சிறப்பாக இருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 115 மட்டுமே. பல போட்டிகளில் மிகவும் மந்தமாக ஆடி அணியின் ரன் குவிப்பை பெரிய அளவில் தடுத்தார். அவரது மந்தமான பேட்டிங்கால் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது கொல்கத்தா அணி.

கேப்டனுடன் மோதல்

கேப்டனுடன் மோதல்

அது மட்டுமின்றி, அந்த தொடரில் கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் வீரர்கள் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. அதற்கு ராபின் உத்தப்பாவும் ஒரு காரணம் என அப்போது கிசுகிசுக்கப்பட்டது. அது உண்மை என கூறுவது போல களத்தில் சில சம்பவங்களும் நடந்தன.

உள்ளூர் தொடரில் பார்ம் அவுட்

உள்ளூர் தொடரில் பார்ம் அவுட்

மேலும், உள்ளூர் போட்டிகளில் ஆடி வரும் ராபின் உத்தப்பா சராசரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அதிரடி வீரர் என்று கூறும் அளவிற்கு அவரது பேட்டிங் இல்லை. சையது முஷ்டாக் அலி டி20 தொடரிலும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

அணியில் விடுவிப்பு

அணியில் விடுவிப்பு

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராபின் உத்தப்பாவை தங்கள் அணியில் இருந்து விடுவித்தது. மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடிவு செய்தார் உத்தப்பா.

2௦20 ஐபிஎல் ஏலம்

2௦20 ஐபிஎல் ஏலம்

2௦20 ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கோதாவில் குதித்தார் ராபின் உத்தப்பா.

ராபின் உத்தப்பா விலை

ராபின் உத்தப்பா விலை

2020 ஐபிஎல் ஏலத்தில் தன் பெயரை கொடுத்த அவர், தன் ஏல அடிப்படை விலையாக 1.5 கோடி நிர்ணயம் செய்து அதிர வைத்துள்ளார். வேறு எந்த இந்திய வீரரும் இத்தனை பெரிய தொகையை அடிப்படை விலையாக வைக்கவில்லை.

மற்ற வீரர்கள் விலை

மற்ற வீரர்கள் விலை

பெரும்பாலும் 1 கோடி என்பதோடு ஏலத்தில் பங்கேற்கும் மற்ற இந்திய வீரர்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர். பாட் கம்மின்ஸ் பிரபல வெளிநாட்டு வீரர்கள் பலர் 2 கோடி மற்றும் 1.5 கோடியை தங்கள் ஏல அடிப்படை விலையாக நிர்ணயம் செய்துள்ளனர்.

வாங்கப்பட மாட்டார்

வாங்கப்பட மாட்டார்

ராபின் உத்தப்பா 34 வயதான, பார்ம் அவுட் வீரர் என்பதால் அவரை வாங்க பெரிய அளவில் போட்டி இருக்காது என்றே கருதப்படுகிறது. இருந்தாலும், கொல்கத்தா தவிர ஏழு அணிகளில் எந்த அணியாவது தன்னை வாங்கும் என நம்புகிறார் உத்தப்பா.

குறைந்த விலை ட்ரிக்

குறைந்த விலை ட்ரிக்

ஐபிஎல் ஏலத்தில் குறைந்த விலை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் ஒரு அணி ஏலம் கேட்கும் போது போட்டி அணிகள் வேண்டுமென்றே விலையை ஏற்றி விடும் நிகழ்வும் அதிகமாக நடைபெறும். உத்தப்பா குறைந்த விலை நிர்ணயம் செய்திருந்தால், அந்த வகையில் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால், பேராசைப்பட்டு அவமானப்படப் போகிறார் உத்தப்பா.

Story first published: Tuesday, December 3, 2019, 15:12 [IST]
Other articles published on Dec 3, 2019
English summary
IPL Auction 2020 : Robin Uthappa fix his base price at hefty 1.5 crore, which may lead him to be unsold at the auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X