Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சைலன்ட்டாக வந்த புது கோச்.. ஏலத்துக்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிரடி!

Recommended Video

IPL AUCTION 2020 | Unsold Indian Players list

கொல்கத்தா : 2௦20 சீசனுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19 அன்று நடைபெறும் முன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிரடியாக பேட்டிங் பயிற்சியாளரை நியமனம் செய்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எந்த அறிவிப்பும் இன்றி இந்த நியமனம் நடந்துள்ளது.

அஸ்வின் நீக்கம்

அஸ்வின் நீக்கம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த 2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடர்களில் பிளே- ஆஃப் சுற்றுக்கே செல்லவில்லை. இதை அடுத்து அந்த அணியின் கேப்டன் அஸ்வினை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றம் செய்தது அந்த அணி.

பயிற்சியாளர் நீக்கம்

பயிற்சியாளர் நீக்கம்

பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனை பதவி நீக்கம் செய்தது. அடுத்து புதிய தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். அவருடன் பீல்டிங் பயிற்சியாளராக உலகின் சிறந்த பீல்டரான ஜாண்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டார்.

ஏலத்தில் பஞ்சாப்

ஏலத்தில் பஞ்சாப்

அடுத்ததாக அந்த அணி 2020 சீசனுக்கான ஏலத்துக்கு தயாராகி வந்தது. அந்த அணியில் அதிரடி வீரர்கள் இருக்கும் நிலையில், அஸ்வினுக்கு நிகரான ஒரு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் சில ஆல்-ரவுண்டர்கள் மட்டுமே தேவையாக இருந்தது.

பேட்டிங் பயிற்சியாளர்

பேட்டிங் பயிற்சியாளர்

அந்த அணி ஏலத்தில் யாரை வாங்கும்? என ரசிகர்கள் விவாதித்து வந்த நேரத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உள்ளூர் தொடர்களில் கரை கண்ட வாசிம் ஜாஃபரை பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது.

இணையத்தளத்தில் தகவல்

இணையத்தளத்தில் தகவல்

இந்த தகவல் அந்த அணியின் இணையத்தளத்தில் ஒரு பகுதியில் பணியில் இருப்பவர்கள் பட்டியலில் வாசிம் ஜாபர் பெயரிட்டு, பேட்டிங் பயிற்சியாளர் என குறிப்பிட்டு இருப்பதன் மூலம் தெரிய வந்துள்ளது.

யார் இந்த வாசிம் ஜாஃபர்?

யார் இந்த வாசிம் ஜாஃபர்?

41 வயதாகும் வாசிம் ஜாஃபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார். 2008 ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் பங்கேற்றுள்ளார். அந்த தொடரில் அவர் மோசமாகவே ஆடினார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்

டெஸ்ட் பேட்ஸ்மேன்

டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆகவே அறியப்படும் வாசிம் ஜாஃபர் தற்போது நடந்து வரும் ரஞ்சி தொடரில் தன் 150வது ரஞ்சி ட்ராபி போட்டியில் பங்கேற்று பெரிய சாதனை படைத்தார். வேறு எந்த இந்திய வீரரும் இத்தனை ரஞ்சி தொடர் போட்டிகளில் ஆடியதில்லை.

பலருக்கும் வியப்பு

பலருக்கும் வியப்பு

ஐபிஎல் ஏலத்தன்று காலையில் எந்த அறிவிப்பும் இன்றி வாசிம் ஜாஃபர் குறித்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Thursday, December 19, 2019, 16:54 [IST]
Other articles published on Dec 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+