அனுபவமே இல்லாத வீரர்... முன்னணி வீரர்களை முந்திய ஜேமிசன்.. 15 கோடிக்கு வொர்த்தா?
சென்னை: ஐபிஎல் ஏலத்தில், குறைந்த அனுபவமே உள்ள கெயில் ஜேமிசன் 2வது அதிக தொகைக்கு எடுத்திருப்பது வொர்த் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
14வது ஐபில் தொடருக்காக நேற்று நடைபெற்ற ஏலத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அனுபவம் குறைந்த கெயில் ஜேமிசனை எடுக்க டெல்லி, பெங்களூரு , பஞ்சாப் அணிகள் போட்டி போட்டன.
இறுதியில் கெயில் ஜேமிசனை ரூ.15 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. ஆரம்ப விலை ரூ.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிக தொகைக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

அறிமுகம்
26 வயதாகும் கெயில் ஜேமிசன், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரின் பவுலிங் சாராசரி 13.27 ஆக உள்ளது.

அனுபவமே இல்லை
ஐபிஎல்-ல் கிறிஸ் மோரிஸுக்கு பிறகு அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரரான கெயில் ஜேமின்சன் இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் டி20 பவுலிங் எகனாமி 7.75 ஆக உள்ளது.

ஆச்சரியம்
கெயில் ஜேமின்சன் இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் முக்கிய பங்குவகிப்பார் என கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் ரூ.15 கோடிக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கவில்லை என கம்பீர் கூறியுள்ளார். மேலும் ஜேமிசன் டி20 போட்டிகளில் அவ்வளவாக ஆடியதில்லை. இந்த ஐபிஎல் அவருக்கு சிறந்த அனுபவத்தை தரும் எனவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

உண்மை
ஏலம் குறித்து பேசியுள்ள கெயில் ஜேமின்சன், உண்மையை கூற வேண்டும் என்றால் நான் ஏலம் குறித்து கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏலத்தில் இருந்ததால் இதனை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications