Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கே ஏமாற்றமாக தான் இருக்கு..!! அணி தேர்வு குறித்து சிஎஸ்கே தலைமை அதிகாரி பரபரப்பு பேட்டி

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட 25 வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இதில் வெளிநாட்டு வீரர்கள் 8 பேர், உள்நாட்டு வீரர்கள் 17 பேரை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது. எனினும் சென்னை அணி 2.85 கோடி ரூபாயை கைவசம் வைத்திருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஷாரூக்கான், டுபிளஸி ஆகியோருக்கு கூடுதலாக கொடுத்திருக்கலாம் அல்லவா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஃபிளமிங் ஐடியா

ஃபிளமிங் ஐடியா

எனினும் அணி தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தொடக்க வீரராக கான்வேவை தேர்வு செய்தது பயிற்சியாளர் பிளமிங் கொடுத்த ஐடியா தான் என்று கூறியுள்ளார். கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பிக்கை கூறினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

எனினும் சென்னை அணியின் நட்சத்திரமாக விளங்கிய டுபிளஸிஸ் மற்றும் ஷர்துல் தாக்கூரை அணியில் மீண்டும் எடுக்க முடியாதது பெரும் ஏமாற்றத்தை தருவதாக காசி விஸ்வநாதன் கூறினார். ஏலத்தில் எடுக்க எவ்வளவு முயற்சித்தும் அவர்களை மீட்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

தோனி இருக்க பயமேன்

தோனி இருக்க பயமேன்

மெகா ஏலத்தில் இப்படி ஒரு அணியை தேர்வு செய்த பெருமை எங்கள் கேப்டன் தோனிக்கும், பயிற்சியாளர் பிளமிங்கிற்கே சேரும் என்று காசி விஸ்வநாதன் கூறினார்.சென்னை அணி குறித்து என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கவலைப்பட தேவையில்லை, அனைத்தையும் தோனி பார்தது கொள்வார் என்று தெரிவித்தார்.

ஒரு குறை

ஒரு குறை

எனினும் சென்னை அணியில் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் அளவிற்கு எந்த ஒரு வேகப்பந்துவீச்சாளரும் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதே போன்று ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஒர அனுபவ வேகப்பந்துவீச்சாளர் சென்னை அணியில் இல்லை. கடந்த சீசன்களில் சாம் கரண் இருந்தது போன்ற ஒரு இளம் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது ஒரு ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது

Story first published: Sunday, February 13, 2022, 22:26 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+