Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர்கள் பட்டியல்..மொத்தமாக செலவு செய்த பணம் எவ்வளவு..??

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் 600 வீரர்கள் போட்டி போட்டனர். கடந்த 2 நாட்களாக 10 அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து அணியை கட்டமைத்தனர்.

இதில் 2 நாட்களில் மொத்தம் 204 வீரர்கள் 10 அணிகளால் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மொத்தம் 67 வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்த 2 நாள் மெகா ஏலத்தில் மொத்தம் 551 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கிட்ட தட்ட இதைவைத்து 2 பாகுபலி படங்களை எடுக்கலாம்.

IPL Auction 2022 - Full List of star Unsold Players and Total money spend

அதிகபட்சமாக இஷான் கிஷனை மும்பை அணி 15 கோடியே 25 லட்சம் கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் , இந்த ஏலத்தில் சில நட்சத்திர வீரர்கள் ஏலம் போகவில்லை. இந்திய வீரர் ரெய்னா, ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், வங்கதேச வீரர் ஷகிபுல் ஹசன்,இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித், தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர்

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வீன்ஸ், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா, ஏஸ்டன் ஏகார், ஆஸி கேப்டன் ஆரோன் பிஞ்ச், இந்திய வீரர்கள் அமித் மிஷ்ரா, பியூஸ் சாவ்லா, மேற்கிந்திய தீவுகள் வீரர் டேரன் பிராவோ, மும்பை வீரர் குல்கர்னி, கர்லோஸ் பிராத்வெயிட், இந்திய வீரர் புஜாரா

இலங்கை வீரர் அசலங்கா,குசெல் மெண்டிஸ், வெஸ்ட் இண்டிஸ் வீரர் சாய் ஹோப், அகிலா தனஞ்செய்யா, தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ், இந்திய வீரர் மனோஜ் திவாரி, ஜிம்பாப்வே வீரர் பிலஜிங் முசராபானி, தமிழக வீரர் முரளி விஜய், இலங்கை வீரர் திசாரா பெரேரா, இஸ்ரு உதானா, இந்திய வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஏலம் போகவில்லை.

Story first published: Monday, February 14, 2022, 0:51 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+