
அடுத்த கில்கிறிஸ்ட்
இந்த நிலையில், இந்தியாவின் புதிய கில்கிறிஸ்ட், அடுத்த தோனியை ஐ.பி.எல். அணிகள் கண்டுபிடித்துள்ளன. ஆம், அந்த தங்கம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான் உள்ளது. லவ்னித் ஷிசோடியா 21 வயதான அவர், பி.சி.சி.ஐ. நடத்தும் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான தொடரில் பங்கேற்று கலக்கியுள்ளார். அந்த தொடரில் பவர்பிளேவில் அவரது ஸ்டைரக் ரேட் 231 ஆகும்

முச்சதம்
இதே போன்று கார்ப்ரேட் கிரிக்கெட் ஒருநாள் தொடரில் பங்கேற்ற அவர் 129 பந்துகளில் 312 ரன்கள் விளாசியுள்ளார். இதனால் அவரை பற்றி அறிந்த ஐ.பி.எல். அணிகள், அவரது திறமையை பரிசோதிக்க அழைத்துள்ளது. இதில் மும்பை அணி, அவரை குறிவைத்துள்ளதாக தெரிகிறது, இதே போன்று லவ்னித் ஷிசோடியாவை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்க தீவிரமாக உள்ளது.

பஞ்சாப் அணி
பஞ்சாப் அணி, அவரை அழைத்து பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்க வைத்துள்ளது. அதில் லவ்னித் ஷிசோடியா 26 பந்துகளில் 66 ரன்கள் விளாசியுள்ளார். மேலும், மாயங் அகர்வாலின் பயிற்சியாளர் தான் லவ்னித்துக்கும் பயிற்சி அளித்துள்ளார். இதனால் கே.எல்.ராகுலுக்கு பதில், எத்தனை கோடி கொடுத்தாவது லவ்னித்தை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் அணி முடிவு எடுத்துள்ளது.
Recommended Video

ஐ.பி.எல். மெகா ஏலம்
இதே போன்று டெல்லி அணியும் லவ்னித்தை அழைத்து அவரது திறமையை சோதித்துள்ளது. இதனால், ஐ.பி.எல். ஏலத்தில் லவ்னித்துக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தம்மை ஐ.பி.எல். அணிகள் அழைத்தது குறித்து மகிழ்ச்சி அளிப்பதாகவும், எனினும் ஏலத்தில் எடுப்பதும், எடுக்காததும் அவர்களது கையில் தான் உள்ளது என்று லவ்னித் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications