Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலம்..!! சிஎஸ்கே விற்கு தமிழ் இயக்கங்கள் எதிர்ப்பு..!! தோனிக்கு போர்கொடி.. காரணம் என்ன?

சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி 87.5 கோடி ரூபாய் செலவு செய்து 25 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இதில் நட்சத்திர வீரர்கள் ரெய்னா, டுபிளஸியை எடுக்கவில்லை என்றாலும், அனுபவமும், இளமையும் கலந்த ஒரு அணியை சிஎஸ்கே தயாரித்துள்ளது.

இதில் 8 பேர் வெளிநாட்டு வீரர்கள், 17 பேர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள். இம்முறை போட்டிகள் அனைத்தும் மும்பையில் நடைபெற உள்ளது

யார் எதிர்க்கிறார்கள்?

யார் எதிர்க்கிறார்கள்?

இதனிடையே, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. சரி ரெய்னா, ரசிகர்களும், டுபிளஸிஸ் ரசிகர்கள் தான் அந்த ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்கிறார்கள் என்று பார்த்தால், தமிழ் அமைப்புகள் தான் இதற்கு பின் உள்ளனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகீஷ் தீக்சணா என்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளரை ஏலத்தில் தேர்வு செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை நாட்டை சேர்ந்த வீரருக்கு ஏன் வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்று கூறி, தமிழ் அமைப்புகள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மிரட்டல்

மிரட்டல்

தீக்சனாவை அணியிலிருந்து நீக்கவில்லை என்றால் சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் தமிழகத்தில் போட்டியை நடத்த விட மாட்டோம் என்ற தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அமைப்புகளின் இந்த எச்சரிக்கையால் சிஎஸ்கே அணி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை வீரர்களை தேர்வு செய்யாமல் இருந்தது.

வரலாறு

வரலாறு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தும் போது இலங்கையை சேர்ந்த யாரும் ஆட்டத்தில் இருக்க கூடாது என்றும், அப்படி இருந்தால் பாதுகாப்பு தர முடியாது என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால் பல ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே மீண்டும் ஒரு இலங்கை வீரரை எடுத்துள்ளதால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

Story first published: Monday, February 14, 2022, 22:59 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+