Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னொரு ருத்துராஜ் ரெடி.. கணித்தது போலவே இளம் வீரரை வாங்கிய சிஎஸ்கே..!! இளம் ஸ்டார் உருவாகிறார்..!!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு இளம் தொடக்க ஆட்டக்காரரை குறிவைத்து எடுத்துள்ளது.

நட்சத்திர வீரர் டுபிளஸிசை சென்னை அணி ஏலத்தில் , பெங்களூரு அணியிடம் தவறவிட்டது. இதனால் தொடக்கம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் கவலைப் பட்டனர்.

ஆனால் இப்படியோரு நிலை ஏற்படும் என்று கணித்த தோனி, அதற்கான பிளான் பியை முன்பே போட்டு விட்டார்.

கான்வே

கான்வே

ஏலத்தில் நியூசிலாந்து தொடக்க வீரர் கான்வேவை சென்னை அணி ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் சென்னை அணிக்கு ஓப்பனிங் சிக்கல் தீர்ந்தது. மேலும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய முடியும். இதனால் கான்வேவை பிளேயிங் லெவனில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்திய வீரர் தான் அந்த இடத்துக்கு தேவை.

சேனாபதி

சேனாபதி

இதை கருத்தில் கொண்டு சென்னை அணி தற்போது, இன்னொரு ருத்துராஜ் கெய்க்வாட்டை கண்டுபிடித்துள்ளது .ஆம், ஓடிசாவை சேர்ந்த 24 வயதான சுப்ரான்சு சேனாபதியை தான் சென்னை அணி தேர்வு செய்துள்ளது. . சேனாபதி விஜய் ஹசாரே கோப்பையில் ஓடிசா அணிக்காக விளையாடி இருக்கிறார்.. தற்போது வரை 7 போட்டிகளில் அவர் 275 ரன்கள் விளாசியுள்ளார். அதில் ஒரு சதமும் அடங்கும்

குறிவைத்த சென்னை

குறிவைத்த சென்னை

இதே போன்று சையது முஸ்தாக் அலி தொடரிலும் சேனாபதி 5 போட்டிகளில் விளையாடி 138 ரன்கள் விளாசியுள்ளார். சேனாபதியின் பேட்டிங் ஸ்டைலும் கிட்டதட்ட ருத்துராஜை போல் உள்ளது. இதனால் அவரை டிசம்பர் மாதமே சென்னைக்கு அழைத்து, அவரது பேட்டிங்கை பரிசோதித்து சென்னை அணி பார்த்துள்ளது.

சென்னை ஸ்டைல்

சென்னை ஸ்டைல்

இதில் சேனாபதி சிறப்பாக செயல்பட்டதால், அவரை குறிவைத்த சென்னை அணி ஏலத்தில் சரியாக தேர்வு செய்தது. ஒவ்வொரு இளம் வீரர்களையும் திறமையை அறிந்து சிஎஸ்கே அவர்களை முன் கூட்டியே, பரிசோதனை செய்து, அவர்களை தட்டி தூக்கியுள்ளது. சென்டின அணியின் இந்த செயல்பாடு ரசிகர்களை நிச்சயம் ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தும்.

Story first published: Sunday, February 13, 2022, 19:54 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+