ஐபிஎல் மினி ஏலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது மொத்தம் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 87 இடங்கள் நிரப்ப படுகின்றன. 405 வீர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கிறார்கள்.ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பே சென்னை, மும்பை அணிகள் தங்களது அணியை தயார் செய்துவிட்டன. எனினும் தற்போது கூடுதல் வீரர்களை தேர்வு செய்து அணியை பலப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே உள்ளது.
வரலாறு படைத்த தம்பி... வெறும் கையோடு சென்ற அண்ணன்!
82 வீரர்கள்...ஒரு நாளில் ரூ.167 கோடி செலவு.. நிறைவடைந்தது ஐபிஎல் மினி ஏலம்!
ஏலம் முடிந்ததை அடுத்து அணி நிர்வாகிகளுக்கு பிசிசிஐ விருந்து வழங்குகிறது
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்சமாக சாம் கரணை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது
ஐபிஎல் மினி ஏலத்தில் 29 வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தமாக 167 கோடி ரூபாய் வீரர்களை வாங்க செலவளிக்கப்பட்டுள்ளது
ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தமாக 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்தது
ஷகிபுல் ஹசனை கொல்கத்தா அணி வாங்கியது
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை 1 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது
கடைசி கட்ட சுற்று ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது
அன்று வலிமை அப்டேட்.. இன்று ‘துணிவு’ ஆன ஏலம்; பென் ஸ்டோக்ஸ் - மொயீன் அலி குறித்து சிஎஸ்கே ட்வீட்!
சிஎஸ்கே வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த அயர்லாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஸுவா லிட்டிலை ரூ. 4 கோடிக்கு எடுத்தது குஜராத்
பெரிய தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் பாபா இந்திரஜித் மீது எந்த அணியின் ஆர்வம் காட்டாததால் ஏலம் போகவில்லை
சிஎஸ்கே செய்த மிகப்பெரும் தவறு.. தங்கத்தை தவறவிட்டதால் ரசிகர்கள் ஷாக்!
தோனிக்கு பிறகு மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என எதிர்பார்க்கப்பட்ட நாராயண் ஜெகதீசன் ரூ.90 லட்சத்திற்கு வந்தும் தவறவிட்ட சிஎஸ்கே; விஜய் ஹசாரேவில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து உலக சாதனை படைத்திருந்தார்
நியூசிலாந்தின் ஸ்டார் பவுலர் கெயில் ஜேமிசனை ரூ. 1 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியதால் ரசிகர்கள் ஆச்சரியம்
"தோனியை யாருக்குதான் பிடிக்காது"
2023ம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் முதற்கட்டமாக ஏலம் முடிந்தது; 2ம் கட்ட ஏலத்தில் எந்த வீரர்களை கொண்டு வரலாம் என ஒவ்வொரு அணியும் 10 பெயர்களை கோரலாம் என அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸை ரூ. 75 லட்சம் கொடுத்து வாங்கியது லக்னோ அணி
ஐபிஎல்-ல் அதிக அனுபவமுள்ள மணிஷ் பாண்டேவை ரூ. 2.40கோடி கொடுத்து வாங்கியது டெல்லி கேப்பிடல்ஸ்
தமிழக வீரர் முருகன் அஸ்வின் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டாததால் ஏலம் போகவில்லை
இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவியை ஏலம் எடுக்க, ராஜஸ்தான், குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி; ரூ. 20 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தை ரூ. 6 கோடிக்கு முடித்தது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் மினி ஏலத்தில் 2022 U-19 உலககோப்பையில் விளையாடிய ஷாயிக் ரஷித், ஹரி நிசாந்த ஆகியோரை சிஎஸ்கே வாங்கியது
தமிழக வீரர் நாராயண் ஜெகதீசனை தவறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 90 லட்சத்திற்கு குஜராத் அணி எடுத்தது
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த விஷ்ராந்த் சர்மா என்ற இளம் வீரருக்காக ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் கடும் போட்டி, ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகையில் வந்த வீரரை ரூ.260 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத் அணி
"மெழுகு டோலு நீ.... அழகு ஸ்கூல் நீ..." Kaviya maran on the Floor..
17 வயதே ஆகும் ஷேக் ரஷித் எனும் இந்திய இளம் வீரரை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை ஏலத்தில் எடுத்தது குறித்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டாக்ஸ் டைமிங் ட்வீட்!
சென்னை அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படும் சூழலில் அடில் ரஷித், ஆடம் ஜாம்பா, ஷாம்சி போன்ற முன்னணி வீரர்களை தவறவிட்டதால் ரசிகர்கள் குழப்பம்
பெரிய தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஸ்பின்னர் அடில் ரஷித்தை அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கே வாங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை ரூ.50 லட்சம் என்ற அடிப்படை தொகையில் ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி
இங்கிலாந்தின் முன்னணி வீரர் கிறிஸ் ஜோர்டன் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டாததால் ஏலம் போகவில்லை
இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டை ரூ. 2 கோடி கொடுத்து வாங்கியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி, எந்த அணியுமே ஆர்வம் காட்டாததால் குறைந்த தொகைக்கு எடுத்தது
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியது குறித்து CSK ட்வீட்!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் நிகோலஸ் பூரணை லக்னோ அணி ரூ. 16 கோடிக்கு எடுத்தது
சாதனை படைத்த கேமரூன் கிரீன்
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை, ரூ.16.25 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஒரு காலத்தில் ஆர்பிஎஸ்ஜி.. இப்போது சிஎஸ்கே.. ரஹானே - தோனி - பென் ஸ்டோக்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ரூ.5.75 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி!
தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் விடப்பட்டார். அவரை வாங்க லக்னோ, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் போட்டியிட்டன. ரூ.15 கோடியை ஏலத்தொகை எட்டிய போது, சென்னை அணி களத்தில் இறங்கியது. இறுதியாக சென்னை அணி ரூ.16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை வாங்கியது.
பின்னர் ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஏலத்தில் விடப்பட்டார். இவரை வாங்க டெல்லி, மும்பை அணிகள் தீவிரமாக போட்டியிட்டன. இறுதியாக மும்பை அணி கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு வாங்கியுள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு வாங்கியதே மும்பை அணியால் அதிக விலை வாங்கப்பட்ட வீரராக இருந்தார். தற்போது கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ஏலத்தில் வாங்க ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இறுதியாக ரூ. 5.75 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒடியன் ஸ்மித்தை ரூ.50 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசாவை ரூ.50 லட்சத்திற்கு பஞ்சாப் அணியும் வாங்கியுள்ளன
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரணை வாங்க மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளிடையே போட்டி ஏற்பட்டது. பின்னர் பெங்களூரு, மும்பை அணிகள் விலகிய நிலையில், ராஜஸ்தான் - சென்னை அணிக்கு இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர் ராஜஸ்தான் விலகிய பின்னர், சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. சென்னை அணி ரூ.15.25 கோடி வரை ஏலம் கேட்ட நிலையில், பஞ்சாப் அணி ரூ.15.50 கோடிக்கு ஏலம் கேட்டது. இதனால் சென்னை விலகிய பின், லக்னோ அணி களமிறங்கியது. இதனால் சாம் கரணின் விலை ரூ.16.50 கோடியை கடந்தது. இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸின் சாதனை தகர்க்கப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளும் ஏலம் கேட்ட நிலையில், இறுதியாக ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
ஆல்- ரவுண்டர்களில் முதல் வீரராக வங்கதேச அணியின் ஷகில் அல் ஹசன் ஏலத்தில் விடப்பட்டுள்ளார். அவரின் அடிப்படை விலை ரூ.1.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஷகிப்பை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
ஹைதராபாத் அணியின் கையிருப்பில் ரூ.42.25 கோடி கையிருப்பில் இருந்தது. இதனிடையே ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கும், மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கும் வாங்கியுள்ளது. இதனால் ஹைதராபாத் அணியில் கையிருப்பு ரூ. 20.75 கோடியாக உள்ளது.
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ரூஸொவ் ஆகியோர் எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
இந்திய அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய வீரர் மயங்க் அகர்வால் ஏலத்தில் விடப்பட்டார். இவரின் அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை வாங்க சென்னை, ஹைதராபாத் அணிகளிடையே போட்டி ஏற்பட்டது. இறுதியாக மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது.
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக்கை வாங்க ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே போட்டி ஏற்பட்டது. அவரின் அடிப்படை விலையான ரூ.1.50 கோடியில் இருந்த நிலையில், இறுதியாக ஹாரி ப்ரூக் ரூ.13.25 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் வாங்கியது. ராஜஸ்தான் அணியின் கையிருப்பில் ரூ.13.20 கோடி மட்டுமே இருந்த நிலையில், ரூ.13 கோடி வரை ஏலம் கேட்டது.
ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக கேன் வில்லியம்சன் ஏலத்தில் விடப்பட்டார். அவர் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் கொச்சியில் தொடங்கியது
ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் ஐபிஎல் மினி ஏலம் அரங்கத்திற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்
இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஐபிஎல் 2023 மினி ஏலம்; ஏலம் நடைபெறும் இடத்திற்கு ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் வர தொடங்கினர்!
ஐபிஎல் மினி ஏலம் நடக்கவுள்ள அரங்கத்திற்குள் லக்னோ, மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளின் நிர்வாகிகள் வந்தனர்
ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ள அரங்கத்திற்குள் காசி விஸ்வநாதன் தலைமையிலான சிஎஸ்கே குழு வருகை
"தலைவன் பார்த்து கொள்வான்" - மினி ஏலத்திற்கு முன் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை Image
ஏலம் நடைபெறும் இடத்திற்கு ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் வர தொடங்கினர்
2023ம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்திற்காக நேந்திரம் சிப்ஸுடன் களமிறங்கியுள்ளது சிஎஸ்கே குழு
மொத்தமுள்ள 405 வீரர்கள் 13 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுவார்கள்; அதன்படி முதற்கட்டமாக 86 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு திருப்திகர ஆண்டாக அமையவில்லை - சிஇஓ காசி விஸ்வநாதன்
தலைவன் பார்த்து கொள்வான் - மினி ஏலம் குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து
ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன் - கிறிஸ் கெயில்
ஐபிஎல் மினி ஏலத்தில் பல சாதனைகள் படைக்கப்படலாம் என கிறிஸ் கெயில் கணிப்பு
கொல்கத்தா அணி நிர்வாகம், இங்கிலாந்து வீரர் பில் சால்டை எடுக்க வேண்டும். அவர் அதிரடியாக விளையாட கூடியவர். விக்கெட் கீப்பிங்கும் செய்வார். அவரை பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை - கிறிஸ் கெயில்
18 ஆண்டுகளுக்கு முன்பு தோனி இதே நாளில் தான் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். தற்போது அதே நாளில் நடைபெறும் மினி ஏலத்தில் அடுத்த தோனி உருவு எடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு
405 வீரர்கள் ஏலத்திற்கு இருந்தாலும் முதலில் 86 வீரர்கள் தான் ஏலம் விட படுவார்கள். இதன் பின்னர் அணிகளின் தேவைக்கு ஏற்ப மற்ற வீரர்கள் ஏலம்விடப்படுவார்கள்.
இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், ஹேரி ப்ரூக் மற்றும் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெறுகிறது; 10 அணிகளிலும் காலியாக உள்ள 87 இடங்களை நிரப்ப மொத்தம் 405 வீரர்கள் ஏலம்
சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் நாளை காணொலி காட்சி மூலம் மினி ஏலத்தில் பங்கேற்பார் என அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரண் முக்கியமான தேர்வாக இருப்பார் - முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணி வீரர்கள் ஐபிஎல் 2023 தாடர் முழுவதும் விளையாடுவார்கள் என அறிவிப்பு
மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன்- புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து
சிஎஸ்கே அணியில் சீனியர் வீரர் அம்பத்தி ராயுடுவின் இடத்திற்கு மணிஷ் பாண்டே, உத்தப்பா இடத்திற்கு ரீலே ரூசோவ் போன்ற வீரர்களை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது
சிஎஸ்கே அணியிடம் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் கைவசம் இருக்கிறது. 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களை அதிகபட்சமாக ஏலத்தில் வாங்கலாம்.
மொத்தம் 10 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர். அதிகபட்சமாக ஐதராபாத் அணியிடம் 42 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவு கையிருப்பு தொகை உள்ளது
வணக்கம். ஐபிஎல் மினி ஏலம் 2023 ஆம் ஆண்டு தமிழ் அப்டேட்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம். திறமையும், வாய்ப்பும் ஒன்றாக இணையும் இடம் தான் இந்த ஐபிஎல். ஏலம் வேண்டுமானால் மினியாக இருக்கலாம்,ஆனால் ஒரு ஏழை, எளிய வீரரின் வாழ்க்கையே மாற்றும் சக்தி இதற்கு உள்ளது