Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வளர்த்த கிளியை பறித்து சென்ற மும்பை.. சோகத்தில் ரசிகர்கள்.. போட்ட பிளான் எல்லாம் போச்சு

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது, வேகப் பந்துவீச்சால் சரியாக இல்லாததுதான். அந்த குறையை கடந்த சீசனில் இலங்கை அணியின் பதிரானா தீர்த்து வைத்தார்.

ஆனால் தற்போது பதிரானா பழைய ஃபார்மில் இல்லை. இதனால் பதிரானாவை நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக மேலும் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் தேவை என்ற நோக்கத்தில் சிஎஸ்கே அணி களம் இறங்கியது. இதனால் சிஎஸ்கே அணி தென்னாப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோயிட்சேவை தங்களது அணியில் சேர்த்து விடலாம் என்று எண்ணியது.

IPL auction 2024 - Big blow for CSK as Gerald coetzee goes for mumbai indians

ஏனென்றால் ஜோகன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை சிஎஸ்கே அணி நிர்வாகம் நடத்தி வருகிறது. இதில் ஜெரால்ட் கோயிட்சேக்கு வாய்ப்பு வழங்கி அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் வளர்த்தது. இதன் மூலம் கோயிட்சே ஏலத்தில் வாங்கிவிடலாம் என்று சிஎஸ்கே திட்டம் போட்டது.இந்த நிலையில் கோயிட்சே வந்த உடனே சிஎஸ்கேவுக்கும் மும்பைக்கும் கடும் போர் ஏற்பட்டது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு விலையை ஏற்றினர்.

ஒரு கட்டத்தில் 3.20 கோடியை கோயிட்சேக்கு வழங்க சிஎஸ்கே தயாராக இருந்தது. ஆனால் அதற்கு மேல் மும்பை அணி கேட்டதால் சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகியது. இதனை அடுத்து லக்னோ அணி அந்த ஏலத்திற்குள் புகுந்து மீண்டும் விலையை ஏற்றியது. இதனால் 5 கோடி ரூபாய் வரை மும்பை அணி கோயிட்சேக்கு வழங்க ஆர்வம் காட்டியது. இதன் இடத்தில் லக்னோ அணியும் விலகியதால் தற்போது கோயிட்சே மும்பை அணிக்கு விளையாட போகிறார். இது சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஜெரால்ட் கோயிட்சே போன்ற வெளிநாட்டு வேக பந்துவீச்சாளர் அணியின் பலத்தை நிச்சயம் கூட்டக்கூடிய வீரராக இருக்கிறார். நல்ல யாக்கர் பவுலிங் வீசுகிறார். ஆனால் தற்போது அவர் மும்பை அணிக்கு விளையாட போவது அது அந்த அணிக்கு அடித்த லக்காக பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி ஒரு வெளிநாட்டு வேகபந்துவீச்சாளரை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, December 19, 2023, 14:58 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+