Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம் 2024 - அம்பத்தி ராயுடுக்கு மாற்று இந்த வீரரா? குட்டி பொலார்டை தட்டி தூக்குமா சிஎஸ்கே

துபாய் : ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் நடைபெறுகிறது இது இந்திய நேரப்படி மதியம் 1.30 க்கு தொடங்குகிறது. இந்த நிலையில் 17 வது ஐபிஎல் சீசனுக்கு எந்த வீரர் தேவை என்பது குறித்து ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் ஒரு பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வந்த அம்பத்தி ராயுடு தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இதன் காரணமாக அம்பத்தி ராயுடுவுக்கு மாற்று வீரர் குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து முடிவெடுத்து இருக்கிறது.

IPL auction 2024- CSK Decided to replace ambatti rayudu with sharukh khan

அதன்படி இந்த பட்டியலில் முதன்மை இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஷாருக்கான் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் ஆக உள்ளூர் கிரிக்கெட்டில் பெயர் பெற்ற ஷாருக்கான் எத்தகைய பவுலர்களை எதிர்கொண்டாலும் அடித்து துவம்சம் செய்து விடுவார். ஷாருக்கானுக்கு தோனி போல் ஒரு நல்ல மெண்டர் கிடைத்தால் அவர் நிச்சயம் பெரிய பேட்ஸ்மேனாக விளங்குவார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் போலார்ட் போன்று திறமை கொண்டுள்ள ஷாருக்கான் சென்னை அணியின் மிகப்பெரிய சொத்தாக விளங்குவார். தற்போது பேட்டிங் மட்டுமல்லாமல் ஷாருக்கான் பௌலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். பௌலிங் தெரிந்தால் அணிக்குள் இடம் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்ட ஷாருக்கான் தற்போது சுழற் பந்துவீச்சை கவனம் செலுத்தி அதிலும் கைதேந்து வந்திருக்கிறார்.

இதனால் சிஎஸ்கே அணி ஷாருக்கானுக்கு குறி வைத்து இருக்கிறது. ஷாருக்கானின் அடிப்படை விலை 50 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இந்த நிலையில் ஷாருக்கான் 10 கோடி ரூபாய் வரை மினி ஏலத்தில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி ஷாருக்கான் மீது குறி வைத்திருப்பதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது.

அதன்படி தமிழக கிரிக்கெட் வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாக ஷாருக்கான் எப்படியாவது ஏலத்தில் எடுத்து விட வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஷாருக்கானுக்கு பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகள் வலை வீச காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Story first published: Monday, December 18, 2023, 21:29 [IST]
Other articles published on Dec 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+