Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம்- இந்த 2 வீரர்கள் காட்டில் மழை தான்.. யார் எவ்வளவு விலைக்கு போவார்கள்.. அஸ்வின் கணிப்பு

மும்பை : ஐபிஎல் மினி ஏலம் செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெறும் உள்ள நிலையில் இந்த ஏலத்தில் எந்த வீரர்கள் எத்தனை தொகைக்கு செல்வார்கள் என்பது குறித்து அஸ்வின் கணித்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடப்பு மினி ஏலத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் 14 கோடி ரூபாய்க்கு மேல் செல்வார்கள் என்று கணித்திருக்கிறார்.

IPL auction 2024- R Ashwin Predicts about which player will get more money

இது குறித்து பேசிய அவர் பந்துவீச்சாளர்களின் முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 14 கோடி ரூபாய்க்கு மேல் மினி ஏலத்தில் செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் ஷாருக்கான் ஏலத்தில் வாங்குவதற்கு பல அணிகள் போட்டி போடும் என்றும் அவர் பத்து முதல் 14 கோடி ரூபாய் வரை மினி ஏலத்தில் செல்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதேபோன்று உலக கோப்பையில் ஹீரோ போல் திகழ்ந்த 22 வயது வீரரான ரச்சின் ரவீந்தரா இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெறும் நான்கு கோடிக்கு தான் செல்வார் என்று அஸ்வின் கணித்திருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் பட்டேலை ஏழு முதல் 10 கோடி ரூபாய் வரை கொடுத்து ஏலத்தில் அணிகள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே போன்று தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோயிட்சேவும் 7 கோடி ரூபாய் வரை செல்வார் என்று தெரிவித்திருக்கிறார். இதைப் போன்று வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரோமன் போவெல் 4 கோடி முதல் ஏழு கோடி ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அஸ்வின் கணித்திருக்கிறார்.

இதேபோன்று உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்த டிராவிஸ் ஹெட் வெறும் 4 கோடி ரூபாய்க்கு தான் செல்வார் என்று அஸ்வின் கணித்திருக்கிறார்.இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை 4 முதல் ஏழு கோடி ரூபாய் வரை கொடுத்து அணிகள் வாங்க தயாராக இருக்கும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 18, 2023, 23:23 [IST]
Other articles published on Dec 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+