Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2024 -எந்த நாட்டு வீரர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்கள்..பாதியில் வெளியேறுவாரா CSK பதிரானா

மும்பை : ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் யார் டி20 கிரிக்கெட்டில் எத்தகைய சாதனை படைத்திருக்கிறார்கள் என்பது குறித்து அணிகள் பார்ப்பது வழக்கம்.

ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை ஒவ்வொரு அணியும் பார்த்து வீரர்களை தேர்வு செய்வார்கள்.

IPL auction 2024- Which country players will participate full tournament

அதாவது ஐபிஎல் தொடர் நடைபெறும் கால கட்டத்தில் இந்த வீரர் தொடர்ந்து இரண்டு மாதம் விளையாடுவாரா இல்லை பாதியில் சர்வதேச கிரிக்கெட் தொடர் இருக்கிறது என்று சென்று விடுவாரா என்ற சந்தேகம் ஒவ்வொரு அணிக்கும் ஏற்படும்.

எனவே இதை வைத்துதான் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்வார்கள். இந்த நிலையில் வரும் ஐபிஎல் 2024 ஆம் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் பல சர்வதேச போட்டிகளும் நடைபெறுகிறது. இதன் காரணமாக பல ஸ்டார் வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எந்த நாட்டு வீரர்கள் முழுமையாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்,ஜிம்பாவே ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் மட்டும் மே மாதம் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாராம். காரணம் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியில் விளையாட சென்று விடுவாராம்.

இதேபோன்று இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு சில விதிமுறையுடன் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் டி20 உலக கோப்பைக்கு முன் இங்கிலாந்து அணி சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இதனால் சில வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்றால் அவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் முழுமையாக விளையாட வாய்ப்பு தரப்படாது என்று கூறப்பட்டிருக்கிறது.

இதேபோன்று இலங்கையும், வங்கதேச அணியும் ஐபிஎல் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்கள். அந்த டெஸ்ட் போட்டி ஏப்ரல் மூன்றாம் தேதி தான் முடிவடைகிறது. இதனால் சிஎஸ்கே வீரர் பதிராணா தீக்சனா ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு வீரர்களுமே தாங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பமில்லை என்று கூறி இருப்பதால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Monday, December 18, 2023, 23:35 [IST]
Other articles published on Dec 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+