Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேகேஆரை தெருவில் இழுத்து விட்ட கம்பீர்.. ஸ்டார்கிற்கு 24.75 கோடியா? மற்ற வீரர்களுக்கு என்ன பண்ணுவாங்க?

துபாய் : ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிச்சல் ஸ்டார்க்கை 24 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கி இருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

எனினும் மிச்சல் ஸ்டார்க் போன்ற ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை கொடுத்தது சரியா என்ற விவாதம் ஏற்பட்டிருக்கிறது. மிச்செல் ஸ்டார்க்கை வாங்க வேண்டும் என மும்பை உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டியது.

IPL auction 2024 - worst move from Gambhir to invest more money in to mitchell starc


முதலில் பேட் கமின்ஸ்க்கு மும்பையும் டெல்லியும் அடித்துக் கொண்டார்கள். இருவரும் விலையை ஒன்பது கோடிக்கு மேல் எடுத்து சென்றார்கள். விலை ஒன்பது கோடியே 60 லட்சத்தை தாண்டிய உடன் மும்பை அணி பந்தயத்தில் இருந்து வெளியேறியது. அதன் பிறகு குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் மிட்செல் ஸ்டார்க்கிற்காக இணைந்து விலையை கடுமையாக உயர்த்தினர். ஒரு கட்டத்தில் 20 கோடிக்கு மேல் தாண்டி 24 கோடி 75 லட்சம் வரை சென்றது.

ஆனால் விடாப்பிடியாக கம்பீர் கடைசி வரை நின்று ஸ்டார்கை கொல்கத்தா அணிக்காக வாங்கி இருக்கிறார்.இது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கொல்கத்தா அணி கையில் தற்போது வரை 16 வீரர்கள் தான் இருக்கிறார்கள். இதில் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். ஒரு அணிக்கு அதிகபட்சமாக 25 வீரர்கள் தேவைப்படுவார்கள். இதனால் கைவசம் வெறும் ஆறு கோடியே 95 லட்சம் ரூபாய் தான் தற்போது கே கே ஆர் அணிக்கு இருக்கிறது.

இதை வைத்துக்கொண்டு அவர்கள் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐந்து உள்நாட்டு வீரர்களை வாங்க வேண்டும். கைவசம் வெறும் ஆறு கோடியே 95 லட்சம் ரூபாய் வைத்துக் கொண்டு இவ்வளவு வீரர்களை கே கே ஆர் எப்படி வாங்குவார்கள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்க் போன்ற காயம் அடிக்கடி அடையக்கூடிய ஒரு வீரருக்கு 24 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து இருப்பதை பைத்தியக்காரத்தனம் என்று ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.
கொல்கத்தா அணியை பழையபடி சாம்பியனாக கம்பீர் மாற்றுவார் என பார்த்தால் தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டதாக ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.
Story first published: Tuesday, December 19, 2023, 16:27 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+