U19 உலககோப்பை வென்ற இந்திய கேப்டன்களுக்கு தொடரும் சாபம்! IPL ஏலத்தில் 3 கேப்டன்களுக்கு நடந்த சோகம்
மும்பை : 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதன் பிறகு விராட் கோலி ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் கோலி தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து இன்று வரை விராட் கோலி தான் நம்பர் ஒன் இந்திய வீரராக இருக்கிறார். டெஸ்ட், டி20 ,ஒருநாள் கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்திலும் விராட் கோலியின் புகழ் தான். இதனால் விராட் கோலியை போல் அண்டர் 19 உலக கோப்பையை வென்றால் ஸ்டார் வீரராக வரலாம் என பல கிரிக்கெட் வீரர்கள் நினைத்தனர்.

ஆனால் கோலிக்கு பிறகு அந்த பதவிக்கு வந்து யார் சாம்பியன் பட்டத்தை வென்றாலும் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அண்டர் 19 உலக கோப்பையில் வென்ற மூன்று இந்திய கேப்டன்கள் நடப்பு ஐபிஎல் 2025 ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்விஷா கடந்த 2018 அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெற்ற பிரித்விஷா டெஸ்ட் போட்டி, ஐபிஎல் என அனைத்திலும் புகழின் உச்சிக்கு சென்றார்.
எனினும் அதன் பிறகு பிரிதிவிஷாவுக்கு ஒரு சரிவு காலமாக இருக்கிறது.
மும்பை ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரிதிவிஷா தற்போது ஐபிஎல் தொடரில் சம்பளத்தை ஏழரைக் கோடியில் இருந்து 75 லட்சமாக குறைத்தும் யாராலும் தேர்வு செய்யப்படவில்லை. இதை போன்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் யாஷ் தூல், 2022 அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை யாஷ் தூல் தலைமையிலான இந்திய அணி வென்றது.
அதன் பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் யாஷ் தூல் சேர்க்கப்பட்டு அவர் சதம் அடித்தார். இதனால் சாம்பியன் வீரர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு யாஷ் தூலுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டு அவர் ஒரு ஆண்டு காலம் கிரிக்கெட்டு விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். தற்போது மீண்டும் ரஞ்சி கிரிக்கெட்டுக்கு அவர் திரும்பி இருக்கிறார். இந்த சூழலில் ஐபிஎல் மெகா ஏலத்தில் யாஷ் தூல் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் உன்முகுத் சந்த். 2012 u19 உலக கோப்பையை விராட் கோலி போல் சதம் அடித்து வென்று சந்த் கொடுத்தார். எனினும் அதன் பிறகு சந்த் பெரிய அளவில் சாதிக்காததால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது. இதனால் தற்போது அமெரிக்காவுக்கு குடியேறி அங்கு உள்ள அணியில் விளையாட முயற்சி செய்து வருகிறார். இந்த தருணத்தில் தன்னுடைய பெயரை சந்த் ஏலத்தில் பதிவு செய்தார். ஆனால் அவருடைய பெயர் ஏலம் மேடைக்கு ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications