Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பெரிய சம்பளம் கொடுக்கிறோம்.. கொல்கத்தா டீமை விட்டு வந்துருங்க".. ஆல் - ரவுண்டரிடம் டீல் பேசிய அணி

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் பற்றிய ஒரு தகவல் ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஒரு ஐபிஎல் அணி அவருக்கு பல கோடி கொடுக்க முன்வந்த போதும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட்டு வர மாட்டேன் என உறுதியாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூட்யூப் சேனலில் பேசிய கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைப்பது பற்றி ஆலோசனை செய்து வந்த போது நடந்த விஷயம் பற்றி விவரித்தார்.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரசலை 12 கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருந்தது. அவரை அணியில் இருந்து விடுவிக்கவில்லை. தங்கள் அணிக்கு கோப்பை பெற்றுத் தந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆண்ட்ரே ரசலை தக்க வைத்தது.

ஆனால், அதற்கு முன் ஆண்ட்ரே ரசலை தொடர்பு கொண்ட ஒரு முன்னணி ஐபிஎல் அணி அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்றால் தாங்கள் மிகப்பெரிய தொகையை அளித்து ஏலத்தில் வாங்குவதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் அதை ஆண்ட்ரே ரசல் மறுத்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

முக்கியமாக அந்த அணி சார்பாக பேசிய நபரிடம் தான் "கேகேஆர் அணியை சேர்ந்தவன்." என பலமுறை மீண்டும், மீண்டும் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம், பணத்தைவிட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் முக்கியம் என ஆண்ட்ரே ரசல் உறுதியாக நின்ற தகவல் வெளியாகி உள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு ரசல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் பகுதி நேர வந்துவீச்சாளராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அதனால் அந்த அணியும் அவரை தக்க வைத்து வருகிறது.

Story first published: Tuesday, December 3, 2024, 11:32 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+