IPL Auction- RTM விதியில் அஸ்வின் சொன்ன மாற்றம்.. பணக்காரர்களான வீரர்கள்! எப்படி நடந்தது?
ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் விடுத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றதால் பல்வேறு வீரர்கள் பலனடைந்து இருக்கிறார்கள். ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான ஒரு விஷயம் என்றால் அது ஆர் டி எம் கார்டு தான். அதாவது ரைட் டு மேட்ச் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
ஏலத்தில் ஒரு அணி ஒரு வீரரை எடுக்கிறது என்றால் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி ஏற்கனவே அந்த வீரர் விளையாடிய அணி அதே தொகையை கொடுத்து எடுக்கலாம். உதாரணத்திற்கு அஸ்வினை சிஎஸ்கே அணி எட்டு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கிறது என வைத்து கொள்வோம்.

அப்போது, அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் அணியிடம் ஆர் டி எம் கார்டு இருந்தால் அதனை அவர்கள் பயன்படுத்தி அதே எட்டு கோடி ரூபாய் கொடுத்து அஸ்வினை வாங்கலாம். இதுதான் பழைய விதியாக இருந்தது. ஆனால் இதற்கு எதிராக அஸ்வின் குரல் கொடுத்து இந்த விதியையே மாற்றினார்.
அதாவது தம்மை வேண்டாம் என்று தக்க வைக்காமல் ஏலத்தில் விடுவித்து பின்னர் எப்படி என்னை அதே தொகைக்கு கொடுத்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தினாலும், இன்னொரு முறை ஒரு அணிக்கு வாய்ப்பு வழங்கி தொகையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அஸ்வின் கோரிக்கை விடுத்தார்.
இதனை தான் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் நடைபெறும் முதல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்க்கு செம லக் அடித்தது. பண்டை ஏலத்தில் எடுக்கும் போது லக்னோ அணி அவரை 20 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.அப்போது டெல்லி அணி தங்களிடம் இருந்த ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியது.
இதுவே பழைய விதியாக இருந்தால் அதே தொகைக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருக்கும். ஆனால் தற்போது புதிய விதிப்படி மீண்டும் ஒருமுறை லக்னோ அணிக்கு வாய்ப்பு வழங்கியது. அதில் லக்னோ தங்களுடைய ஏலத் தொகையை சுமார் 7 கோடி ரூபாய் வரை உயர்த்தி 27 கோடி ரூபாய்க்கு கேட்டனர். இதனால் அந்தத் தொகையை தங்களால் வழங்க முடியாது என டெல்லி அணி தங்களுடைய RTM கார்டை திரும்பி பெற்றுக் கொண்டது.
இதன் மூலம் பண்ட்க்கு புதிய விதியால் 6 கோடியே 25 லட்சம் ரூபாய் கூடுதல் பணம் கிடைத்தது. இதேபோன்று கேட்கப்பட்டபோது அவரை 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காவியா மாறன் ஏலத்தில் எடுத்தார். ஆனால் ஆர்டிஎம் கார்டை பஞ்சாப் அணி பயன்படுத்தவிரும்புவதாக கூறியது. இதன் அடுத்து காவியா மாறன் 18 கோடி ரூபாய் வழங்குவதாக கூறினார். இதனால் வேறு வழி இன்றி அதே பண்டை தாங்களும் வழங்குவதாக கூறி ஆர்ஸ்தீப் சிங்கை பஞ்சாப் அணி எடுத்தது. இதனால் அஸ்வின் செய்த ஒரு மாற்றத்தால் பல வீரர்களுக்கு விடிவுகாலம் கிடைத்திருப்பதாக வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications