Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதத் தொகை, நீக்கப்பட்ட வீரர்கள் பட்டியல், ஆர்டிஎம்

சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வீரர்களை வாங்க எவ்வளவு மீதத் தொகை உள்ளது? எத்தனை ஆர்டிஎம் அட்டை உள்ளது? என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம். மேலும், சிஎஸ்கே அணி எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளது? யார், யாரை அணியில் இருந்து விடுவித்து உள்ளது? எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்க சிஎஸ்கே அணி முயற்சி செய்யும்? என்பது போன்ற தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் விவரம்:

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

ருதுராஜ் கெய்க்வாட் - 18 கோடி
ரவீந்திர ஜடேஜா - 18 கோடி
சிவம் துபே - 12 கோடி
மதீஷா பதிரானா - 13 கோடி
மகேந்திர சிங் தோனி - 4 கோடி

(இந்த ஐந்து வீரர்களை தக்க வைக்க சிஎஸ்கே செலவிட்ட மொத்த தொகை 65 கோடி)

2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த வீரர்கள் விவரம்:

மொயின் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகீஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிச்சர்ட் க்ளீசன், அவனிஷ் ராவ் ஆரவெல்லி, டெவோன் கான்வே

2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மீதம் உள்ள தொகை மற்றும் ஆர்டிஎம்:

சிஎஸ்கே அணியிடம் 55 கோடி மீதம் உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் இந்த தொகையை வைத்து சிஎஸ்கே அணி குறைந்தபட்சம் 13 வீரர்கள், அதிகபட்சம் 20 வீரர்களை வாங்க வேண்டிய நிலையில் உள்ளது. சிஎஸ்கே அணியிடம் ஒரு ஆர்டிஎம் மட்டுமே மீதம் உள்ளது.

2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை வாங்க முயற்சிக்கும்?

சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் என்ற அடிப்படையில் - ரிஷப் பண்ட், கே எல் ராகுல், இஷான் கிஷன்

சிஎஸ்கே வீரர்கள் என்ற அடிப்படையில் - தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னர், அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, டெவான் கான்வே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை மட்டும் தக்க வைத்து உள்ளது. இந்த ஐந்து வீரர்களுக்காக 65 கோடி ரூபாயை அந்த அணி சம்பளமாக அளித்து உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 120 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக அளிக்க முடியும் என்ற வகையில் சிஎஸ்கே அணியிடம் தற்போது 55 கோடி ரூபாய் மீதம் உள்ளது.

ஒரு அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அதிகபட்சமாக ஆறு வீரர்களை மட்டும் தக்க வைக்க முடியும். ஆறு வீரர்களில் எத்தனை வீரர்களை தக்க வைக்கவில்லையோ அதற்கு ஈடாக ஆர்டிஎம் அட்டையை ஏலத்தின் போது பயன்படுத்தி தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வீரரை வாங்கிக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது.

அந்த வகையில் சிஎஸ்கே அணியிடம் ஒரு ஆர்டிஎம் அட்டை மீதம் உள்ளது. சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயமாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை வாங்க வேண்டிய அவசியம் உள்ளது. தோனி பேட்டிங்கின் போது மட்டுமே விளையாடுவார் என்பதால் இந்த முடிவை சிஎஸ்கே எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணிக்காக ஆடி உள்ள சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், கே எல் ராகுல், இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவரை சிஎஸ்கே அணி வாங்க முயற்சி செய்யக் கூடும். தங்கள் கையிருப்பை பொறுத்து சிஎஸ்கே அணி அவர்களில் ஒருவரை வாங்கும் முடிவை எடுக்கக் கூடும்.

இதை தவிர்த்து ஏலத்தின் போது தங்கள் அணியில் 2024 ஐபிஎல் தொடரில் இடம்பெற்று இருந்த பெரும்பாலான வீரர்களை சிஎஸ்கே அணி வாங்க முயற்சி செய்யும் என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறி இருந்தார். அந்த வகையில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னர், அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, டெவான் கான்வே ஆகிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க முயற்சி செய்யும்.

Story first published: Friday, November 22, 2024, 19:28 [IST]
Other articles published on Nov 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+