Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction - சிஎஸ்கே-வுடன் மும்பை இந்தியன்ஸ் மோதல்.. இந்த ஒரு விஷயத்தில் தான் முட்டிக் கொள்வார்கள்

மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே விக்கெட் கீப்பர்களை வாங்குவதில் மிகப்பெரிய போட்டி நிலவும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஏலத்தில் குறிப்பிட்ட சில விக்கெட் கீப்பர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் போது நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஏலத்தில் போட்டி இருக்கும் என விமர்சகர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் வெவ்வேறு வியூகங்களை வகுத்து வீரர்களை குறி வைத்து வாங்க உள்ளன. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனிக்கு அடுத்து சிறந்த விக்கெட் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ipl 2025 chennai super kings 2025

தோனி தனது 43வது வயதில் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். அவரால் முழு நேர விக்கெட் கீப்பராக செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, அவர் இம்பாக்ட் வீரராக பேட்டிங்கின் போது மட்டுமே விளையாடுவார் என்ற நிலையில் அவருக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணியில் தேவை.

சர்வதேச அனுபவம் இல்லாத இளம் விக்கெட் கீப்பர் ஒருவரை வாங்கி அவரை பட்டை தீட்டுவது என்பது அதிக நேரம் பிடிக்கும் வேலை என்பதால் அனுபவ விக்கெட் கீப்பர்களை வாங்குவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யும் என கூறப்படுகிறது. ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கே எல் ராகுல் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய நால்வரின் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்படும் போது சிஎஸ்கே நிச்சயம் அவர்களை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யும் என கூறப்படுகிறது.

அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷன் நீக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அணியில் இருந்து நீக்கினாலும் ஏலத்தில் அதிக விலை கொடுத்தாவது அவரை வாங்கிவிடும். அதேபோல இந்த முறை இஷான் கிஷனை வாங்க மும்பை இந்தியன்ஸ் முயற்சி செய்யும்.

ஒரு வேளை அவரை வாங்க முடியாமல் போனால் நிச்சயமாக ரிஷப் பண்ட், கே எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை வாங்க முயற்சி செய்யும். இந்த மூன்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் போதும் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே போட்டி நிலவும். ஆனால். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த இரண்டு அணிகளிடமும் மிகக் குறைந்த அளவிலான மீதத் தொகையே உள்ளன. அந்த தொகையை வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்க வேண்டும். எனவே, எந்த சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனையும் வாங்க முடியாமலும் போகலாம்.

Story first published: Tuesday, November 19, 2024, 8:36 [IST]
Other articles published on Nov 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+