Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction- இது வேற லெவல்! 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் ஆஸ்திரேலிய வீரரை வாங்கிய சிஎஸ்கே

மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தாறுமாறான ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரை வாங்கி இருப்பது ரசிகர்களை குஷியில் துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எப்போதுமே வேகப்பந்து வீச்சு என்பது ஒரு குறையாக இருக்கும்.

சிஎஸ்கே அணி இலங்கை வீரர் பதிரானாவை மட்டுமே நம்பி இருந்தது. பதிரானா கடந்த சீசனில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய போது, சிஎஸ்கே அணி கடுமையாக தடுமாறியது. ஆனால் தற்போது சிஎஸ்கே அணியில் சாம் கரனை வாங்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு அசுர வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரு ஆஸ்திரேலிய வீரரை சிஎஸ்கே வாங்கி இருக்கிறது.

ipl auction 2025 csk nathan ellis 2025

ஆம், அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் எலிஸ்தான். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசும் நாதன் எலிஸ் யாக்கர் வீசுவதில் வல்லவர். அது மட்டுமல்லாமல் இறுதிக்கட்டங்களில் பந்தின் வேகத்தை மாற்றி வீசி பேட்ஸ்மேன்களை பயங்கரமாக குழப்புவார். ஆஸ்திரேலியாவுக்காக 20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

எக்கனாமி 7.65 என்ற அளவில் வைத்திருக்கிறார். 30 வயதான நாதன் எலிஸ் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய டி20 வீரராக விளங்கி வந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் அடிப்படை விலை கொண்ட நாதன் எலிசை சிஎஸ்கே வாங்க முற்பட்டபோது பஞ்சாப் அணி அவருக்கு ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியது.

எனினும் சிஎஸ்கே அணி நாதன் எலிஸ்க்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக கூறியதை எடுத்து பஞ்சாப் அணி போட்டியிலிருந்து விலகியது. இதன் மூலம் நாதன் அலிஸ் சிஎஸ்கே அணிக்கு திரும்பிருக்கிறார். எப்படி சிஎஸ்கே அணியில் போலிங்கர் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தாரோ, அதேபோல் ஒரு இடத்தை நாதன் எலிசும் இருப்பார். நாதன் எலிஸ் உடைய திறமை தெரிந்து தான், பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அவரை சிஎஸ்கேவுக்கு வழங்க விடாமல் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி பெரிய அளவில் முயற்சியை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 25, 2024, 20:30 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+