Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம் 2025- விழித்து கொண்ட சிஎஸ்கே.. தொடர்ந்து 2 அதிரடி வீரர்களை வாங்கி குவித்து அபாரம்!

சென்னை : ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் சில மணி நேரம் அமைதி காத்து வந்த சிஎஸ்கே அணி திடீரென்று அடுத்தடுத்து இரண்டு அதிரடி வீரர்களை வாங்கி குவித்து இருப்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிஎஸ்கே அணியிடம் 50 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்தும் வீரர்களை வாங்க முயற்சி செய்து பின் விலை அதிகரித்ததால் சிஎஸ்கே அணி பின்வாங்கியது.

இந்த சூழலில் சிஎஸ்கே அணி எப்போதுதான் முதல் வீரரை வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் கான்வேவின் பெயர் ஏலம் மேடைக்கு வந்தது. காண்வே சிஎஸ்கே அணிக்காக விளையாடி அந்த அணியின் முக்கிய வீரர்களின் ஒருவராக திகழ்ந்தார்.

ipl auction 2025 ipl auction csk ipl 2025


2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வெல்ல கான்வே முக்கிய காரணமாக இருந்தார். எனினும் கான்வேக்கு காயம் ஏற்பட்டதால் அவர் கடந்த சீசனில் விளையாடவில்லை. இந்த நிலையில் கான்வே பெயர் வந்த உடனே சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனை கொடுக்க வேண்டும் என்பது போல் பஞ்சாப் அணி ஏலம் கேட்டு அவரின் விலையை உயர்த்தியது.

இருந்தும் சிஎஸ்கே அணி கான்வேவை கடைசி வரை விடவில்லை. இதன் அடுத்து 6 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி கான்வேவை வாங்கியது. கான்வேக்காக சிஎஸ்கே அணி ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிஎஸ்கேவுக்கு அது பயன்படுத்த தேவையே இல்லாமல் போய்விட்டது. இதை அடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் பிரச்சனை தீர்ந்தது.

இதைப் போன்று இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ராகுல் திருப்பாதியை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க ஆர்வம் காட்டியது. அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலம் கேட்க கேகேஆர் அணியும் அவரை வாங்க வேண்டும் என போராடியது.

இரு அணிகளும் மாற்றி மாற்றி போட்டி போட்டுக் கொள்ள கடைசியில் மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி ராகுல் திருப்பாதியை ஏலத்தில் வாங்கி விட்டதும்இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவின் இடத்திற்கு ராகுல் திருப்பதி சரியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிஎஸ்கே அணியிடம் 45 கோடியே 35 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது சிஎஸ்கே விடம் தற்போது மொத்தம் ஏழு வீரர்கள் உள்ளனர்.

Story first published: Sunday, November 24, 2024, 19:06 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+