Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கே-க்கு வரப்போகும் ஷமி, சிராஜ், நடராஜன்!முற்றிலும் மாறப் போகும் வேகப்பந்துவீச்சு படை

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புது மாறுதலுடன் களமிறங்க போகிறது. ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே அணி ருதுராஜ், ஜடேஜா பதிரானா, சிவம் துபே, தோனி ஆகியோரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியிடம் 55 கோடி ரூபாய் கைவசம் இருக்கிறது.

மேலும் ஒரு rtm கார்டை பயன்படுத்தலாம். இதனை வைத்து சிஎஸ்கே அணி கான்வே, ரச்சின் ரவீந்தரா போன்ற வீரர்களை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே வேகப்பந்துவீச்சாளர்கள் தான்.

ipl 2025 csk mohammed shami mohammed siraj t natarajan

குறிப்பாக இந்தியவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இதனை மாற்றும் விதமாக தற்போது சிஎஸ்கே அணி ஏலத்தில் இரண்டு அல்லது மூன்று புதிய வேகப்பந்து வீச்சாளர்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி ஆர் சி பி அணியில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டு இருக்கிறார்.

சிராஜை ஆட்டிஎம் கார்டு மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் தான் ஆர்சிபி இந்த முடிவை எடுத்து இருக்கும். ஆனால் ஆர் சி பி தக்க வைக்க முடியாதபடி பணத்தை இறக்கினால், அந்த அணி நிச்சயம் சிராஜை வாங்குவதிலிருந்து பின்வாங்கும். இதனால் முஹமது சிராஜை எப்படியாவது வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் சிஎஸ்கே இருக்கிறது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நடராஜன். சன்ரைசர்ஸ் அணி நடராஜனை நீக்கியிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியிடம் ஒரு RTM கார்டு மட்டும்தான் இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஸ்வர் குமார் என மூன்று வீரர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் சன்ரைசர்ஸ் அணி நடராஜனை தேர்வு செய்வது என்பது கடினம் தான்.

இதனை பயன்படுத்திக் கொண்டு சிஎஸ்கே அணி நடராஜனை வாங்க முயற்சி செய்யலாம். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் புவனேஸ்வர் குமார். சிஎஸ்கே அணி எப்போதுமே அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துக் கொள்ளும். அதன்படி புவனேஸ்வர் குமார் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலும் இன்னுமுமே அவர் டி20 கிரிக்கெட்டில் கில்லியாக தான் இருக்கிறார்.

இதனால் புவனேஸ்வர் குமாரை வாங்க சிஎஸ்கே அணி முயற்சி செய்யலாம். இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் முஹமது ஷமி, காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக விளையாடவில்லை. எனினும் சமிக்கு இருக்கும் திறமையும், பவரும் என்ன என்று ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.இதனால் சமியையும் அணிக்கு கொண்டுவர சி எஸ் கே அணி முயற்சி செய்யும். வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் டெல்லி அணி தேர்வு செய்யாத ஆண்ரிச் நோக்கியாவை சிஎஸ்கே வாங்க முயற்சி செய்யலாம். இதனால் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சு படையும் மாறும்.

Story first published: Thursday, October 31, 2024, 20:45 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+