Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL auction- டுபிளசிஸை மிஸ் செய்த சிஎஸ்கே.. அடுத்த ரெய்னா என வர்ணிக்கப்பட்ட வீரரும் கை நழுவினார்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முக்கிய வீரர்களை மிஸ் செய்து விட்டதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பீல்டிங் என இரண்டுலுமே பக்காவான வீரராக விளங்கியவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டுபிளசிஸ் 2022 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி அந்த அணியை தலைமை தாங்கினார். தொடர்ந்து மூன்று சீசன் அந்த அணிக்காக டுபிளசிஸ் விளையாடி வந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் சிஎஸ்கேவின் கிளை அணிகளுக்கு அவர் விளையாடி தான் வந்தார்.

ipl auction 2025 csk ipl auction 2025

இந்த சூழலில் டுபிளசிஸ்க்கு வயதாகிவிட்டது என்று கூறி ஆர் சி பி அணி அவரை விடுவித்து விட்டது. இந்த தருணத்தில் டுபிளசிஸ் பெயர் வந்ததும்,அவரை சிஎஸ்கே மீண்டும் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 2 கோடியான அடிப்படை விலைக்கு டெல்லி அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதேபோன்று கொல்கத்தா அணியை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் நிதிஷ் ரானாவை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது.

நிதிஷ் ரானா நம்பர் மூன்றாவது வீரராக விளையாடக் கூடியவர் சுரேஷ் ரெய்னாவை போல் நிலைத்து நின்று சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்ளும், இவர் சுழற் பந்து வீச்சையும் வீசுவார். இதனால் நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி மூன்று கோடி ரூபாய் வரை கொடுக்க முன் வந்தது. ஆனால் விலை அதிகமாக சிஎஸ்கே அணி போட்டியிலிருந்து விலகியது.

இதை அடுத்து ராஜஸ்தான் அணி 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு நிதிஷ் ரானாவை வாங்கியது. இந்த வீரரை சிஎஸ்கே அணி வாங்கியிருந்தால், பேட்டிங் மேலும் வலுவடைந்திருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் டேரல் மிட்செல், ரகானே ஆகியோரையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்காமல் விட்டது இதனால் இந்த மூன்று வீரர்களும் விலை போகாமல் இருக்கிறார்கள்.

Story first published: Monday, November 25, 2024, 16:51 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+