For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Auction-BIG SHOW மேக்ஸ்வெலை நூலிழையில் மிஸ் செயத சிஎஸ்கே!இன்னும் இந்த வீரர்களை வாங்கினால் போதும்

மும்பை : ஐபிஎல் 2025 ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தின் முதல் நாளில் சிஎஸ்கே அணி முதல் பாதியில் எந்த ஒரு வீரரையும் வாங்காமல் இருந்தனர். ஆனால் மாலை நேரத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி ஆக்ரோஷமாக செயல்பட்டு அடுத்தடுத்து வீரர்களை கைப்பற்றியது.

அஸ்வின், கான்வே, ரச்சின் ரவீந்தரா ராகுல் திருப்பாதி என நான்கு முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதில் அஸ்வின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிருக்கிறார். ராகுல் திருப்பாதி மட்டும்தான் வேறு அணிக்காக விளையாடியவர்.

ipl auction 2025 ipl auction ipl 2025


ஏற்கனவே சிஎஸ்கே அணி 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில் தற்போது நான்கு முக்கிய வீரர்களை வாங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியிடம் 31 கோடியே 60 லட்சம் பணம் கையிருப்பில் இருக்கின்றது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் நடுவரிசையில் இரண்டு பேட்ஸ்மேன்களை வாங்கினால் போதும்.

இந்த தருணத்தில் மேக்ஸ்வெலின் பெயரை வந்தவுடன் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. சுமார் 4 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே அணி மேக்ஸ்வெலுக்கு கொடுக்க முன் வந்தது. ஆனால் பஞ்சாப் அணி கூடுதலாக 20 லட்சம் தருவதாக கூறியதை எடுத்து போட்டியிலிருந்து சிஎஸ்கே அணி விலகியது.ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு மேக்ஸ்வெல் வந்திருந்தால் அது மிகப்பெரிய பலமாக மாறி இருக்கும்.

சென்னை போன்ற ஆடுகளங்களில் மேக்ஸ்வெல் 360 டிகிரி ஆடக்கூடிய வீரர். சுழற் பந்துவீச்சினை அபாரமாக எதிர்கொள்வார். எனினும் ஐபிஎல் தொடரில் கடந்த சில சீசனங்களாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அப்பப்போது மிகப்பெரிய இன்னிங்ஸ்களை ஆடி வருகிறார்.

இதனால் மேக்ஸ்வெல் சிஎஸ்கே அணிக்கு வராமல் போனது நினைத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்கனவே சிஎஸ்கே அணி நடு வரிசையில் ஒரு ஆல்ரவுண்டர் வேண்டும் என்பதற்காக லிவிங் ஸ்டோனை ஏலத்தில் கேட்டது. ஆனால் அவரும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 24, 2024, 20:20 [IST]
Other articles published on Nov 24, 2024
English summary
IPL Auction 2025- CSK Missed Glenn Maxwell Very Narrowly to Punjab kings ஐபிஎல் ஏலம் 2025 - மேக்ஸ்வெலை நூலிழையில் மிஸ் செயத சிஎஸ்கே!இன்னும் இந்த வீரர்களை வாங்கினால் போதும்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+