For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Auction - CSK பிளேயிங் லெவன் இப்படி தான் இருக்கும்! பலம் என்ன? பலவீனம் என்ன?

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு தேவையான 25 வீரர்களை வாங்கி விட்டது. ஏலத்திற்கு முன்பே 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில் தற்போது இரண்டு நாள் நடைபெற்ற ஏலத்தில் 20 வீரர்களை வாங்கி குவித்து இருக்கிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்?

சென்னை அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணி ஏலத்தில் எப்போதும் தங்கள் அணிக்காக ஏற்கனவே விளையாடிய வீரர்களை மீண்டும் தேர்வு செய்து அணியை கட்டமைப்பதில் வல்லவர்கள்.

ipl auction 2025 ms dhoni 2025

தற்போது அவர்கள் இதை தான் பாலோ செய்ய முயன்று இருக்கிறார்கள். அந்த வகையில் சிஎஸ்கே அணி தொடக்க வீரர்களாக ருதுராஜ் ஆகியோர் விளையாடக்கூடும். மூன்றாவது வீரராக ரகானே இடத்தில் தற்போது ராகுல் திருப்பாதி விளையாடுவார் நான்காவது இடத்தில் சிவம் துபே, ஐந்தாவது இடத்தில் ஜடேஜா, ஆறாவது இடத்தில் தோனி, ஏழாவது இடத்தில் ஷாம் கரன்.

எட்டாவது இடத்தில் அஸ்வின், ஒன்பதாவது இடத்தில் நூறு அஹமத், பத்தாவது இடத்தில் பதிரானா, பதினோராவது இடத்தில் கலீல் அகமத் ஆகியோர் விளையாட கூடும். சிஎஸ்கே அணியில் பலமாக பார்க்கப்பட்டது 11 வீரர்களுமே பேட்டிங் செய்யும் வீரர்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது உள்ள சிஎஸ்கே அணையில் 7 அல்லது 8வது வீரர்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்யக் கூடியவர்கள் உள்ளனர். இதைப் போன்று நடு வரிசையில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் சிஎஸ்கேவில் இருப்பார்கள்.

சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வாங்கிய போதெல்லாம் மோயின் அலி போன்ற வீரர்கள் நடுவரிசையில் இறங்கி அதிரடி காட்டுவார்கள். ஆனால் தற்போது அமைந்திருக்கும் சிஎஸ்கே அணியில் அப்படி ஒரு அதிரடி பேட்ஸ்மேன் யாருமே கிடையாது.

இதனால் அந்த இடத்திற்கு சிஎஸ்கே அணி தீபக் ஹூடா, சிவம் துபே, அஸ்வின், சாய் பிரசித் போன்ற வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும். இதேபோன்று தோனிக்கு வயதாகிவிட்டதால் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பரை சிஎஸ்கே அணி இன்னும் கண்டறியவில்லை. இந்த மூன்று விஷயங்கள் மட்டும் தான் சிஎஸ்கே அணியில் குறையாக இருக்கின்றது. பலம் என்று பார்த்தால் சிஎஸ்கே அணி தங்களுடைய பந்துவீச்சை அபாரமாக பலமாக்கி இருக்கிறது.

சுழற் பந்துவீச்சு என்றால் அஸ்வின் ஜடேஜா, நூர் அகமது என மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சு என்றால் பதிரானா, நாதன் எலிஸ், ஜெமி ஓவர்டன், கலீல் அஹ்மத்,கமலேஷ் நாகர்கொட்டி,முகேஷ் சவுத்ரி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இதேபோன்று ஒவ்வொரு அணிக்கும் தொடக்கம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் ருதுராஜ்,கான்வே என இரண்டு வீரர்களுமே வலுவாக இருக்கிறார்கள். இதனால் சிஎஸ்கே அணி 90 சதவீதம் வரை தங்களுடைய அணியை பலமாக வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

Story first published: Monday, November 25, 2024, 22:54 [IST]
Other articles published on Nov 25, 2024
English summary
IPL Auction 2025 - CSK Playing in and strength - Weakness in csk squad CSK பிளேயிங் லெவன் இப்படி தான் இருக்கும்! பலம் என்ன? பலவீனம் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+