2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மாபெரும் வரலாற்று சாதனை படைத்து இருக்கிறார். இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட். இடது கை வேகப் பந்துவீச்சாளரான ஜெயதேவ் உனட்கட்டை நேற்று நடந்து முடிந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரது அடிப்படை விலையான ஒரு கோடிக்கு வாங்கியது.
இத்துடன் அவர் 13 முறை ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டு இருக்கிறார். ஜெயதேவ் உனட்கட்-டை தவிர வேறு எந்த ஒரு வீரரும் ஐபிஎல் ஏலத்தில் இத்தனை முறை வாங்கப்பட்டது இல்லை. ஜெயதேவ் உனட்கட் 13 முறை ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வீரர்கள் அதிகபட்சமாக ஏழு முறை மட்டுமே ஏலத்தில் வாங்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் ஜெயதேவ் உனட்கட் மாபெரும் சாதனையை படைத்து இருக்கிறார். அவர் இதுவரை எட்டு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று இருக்கிறார். 2010 முதல் 2012 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். 2013 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று இருந்தார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றார்.
2016 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். 2017இல் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலும், 2018 முதல் 2021 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இடம் பெற்று இருந்தார். 2022 இல் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், 2023 இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலும் இடம் பெற்று இருந்தார். 2024 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருந்தார்.
2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயதேவ், தற்போது 2025 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஒரு கோடிக்கு வாங்கி உள்ளது.
ஜெயதேவ் உனட்கட் இடம் பெற்ற ஐபிஎல் அணிகள்:
2010 - 2012, 2016 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2014 - 2015 - டெல்லி டேர்டெவில்ஸ்
2017 - ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ்
2018 - 2021 - ராஜஸ்தான் ராயல்ஸ்
2022 - மும்பை இந்தியன்ஸ்
2023 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
2024 - 2025 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி