Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction- காவ்யா மாறன் செய்த மெகா சொதப்பல்.. 5 வீரர்கள் இல்லாமல் தவிக்கும் SRH.. என்ன நடந்தது?

ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் களத்தில் மட்டும் சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது. அதைத் தாண்டி ஏலத்தில் வீரர்களை எப்படி வாங்குவது? அணியை எப்படி கட்டமைப்பது என பல விஷயங்கள் இருக்கிறது. இதனால் தான் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

இந்த சூழலில் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் பார்த்து பார்த்து வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். அதிகபட்சமாக ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்களும் குறைந்தபட்சமாக 18 வீரர்களும் இருக்க வேண்டும்.

ipl auction 2025 srh kavya maran 2025

இதில் ஏழு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்திருக்க வேண்டும். இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எப்படியும் தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து 25 வீரர்களை வாங்கிவிடும். ஆனால் சன்ரைசர்ஸ் அணி செய்த மிகப்பெரிய தவறால் அவர்களிடம் தற்போது 20 வீரர்கள் தான் இருக்கிறார்கள். இது சன்ரைசர்ஸ் அணியின் யுத்தியில் ஏற்பட்ட மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

ஏலத்திற்கு முன்பே எந்த வீரர்களை தக்க வைக்க போகிறீர்கள் என்று லிஸ்ட்டை பிசிசிஐ வெளியிட சொன்னது. அதில் ஒவ்வொரு வீரர்களுக்கும் இவ்வளவு சம்பளத்தை கொடுக்கலாம் என்ற விலை நிர்ணயமும் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சன்ரைசர்ஸ் அணி முதல் மூன்று வீரர்களுக்கு அதிக பணம் கொடுத்து தக்க வைத்தது. ஏலத்திற்கு முன்பே அதிக பணத்தை சன்ரைசர்ஸ் செலவு செய்து விட்டதாக அப்போது விமர்சனம் எழுந்தது.

எனினும் ஸ்டார் வீரர்களை சன்ரைசர்ஸ் தக்க வைத்திருப்பதால் அது பெரிய சிக்கல் இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் மெகா ஏலத்திலும் சன்ரைசர்ஸ் அணி இசான் கிசனை அதிகபட்சமாக 11 கோடியை 25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. இதேபோன்று முகமது சமிக்கு 10 கோடியும் ஹர்சல் பட்டேலுக்கு எட்டு கோடியும் கொடுத்தது. இதில் சன்ரைஸ் அணியில் கையிருப்பு பணம் வெகுவாக குறைந்தது.

இதை அடுத்து இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ராகுல் சாகர், ஆடம் சாம்பா போன்ற வீரர்களை மட்டுமே சன்ரைசர்ஸ் அணியால் வாங்க முடிந்தது. ஒரு கட்டத்தில் ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சன்ரைசர்ஸ் அணியிடம் வெறும் ₹20 லட்சம் ரூபாய் தான் கையிருப்பில் இருந்தது. ஆனால் வீரர்களின் குறைந்தபட்ச விலையே 30 லட்சம் ரூபாய் என்பதால் சன்ரைசர்ஸ் அணியால் எந்த ஒரு வீரரையும் ஒரு கட்டத்திற்கு மேல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் சன்ரைசர்ஸ் அணியில் 20 வீரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 18 வீரர்கள் இருந்தால் போதும் என்றாலும் காயம் மற்றும் வீரர்கள் பங்கேற்காமல் போவது மற்றும் பயிற்சி ஆட்டம் என பல விஷயங்களுக்காக ஒவ்வொரு அணியும் அதிகபட்ச வீரர்களை வாங்கும். ஆனால் சன்ரைசர்ஸ் அணியில் போதிய பணம் இல்லாததால் வெறும் 20 வீரர்களுடன் நிறுத்திக் கொண்டது.காவியா மாறன் செய்த தவறுதான் சன்ரைசர்ஸ் அணியின் இந்த நிலைக்கு காரணம் என்று கிரிக்கெட் விமர்சனங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மறுபடியும் தங்களுக்கு தேவையான 25 வீரர்களையும் வாங்கி விட்டது கையிருப்பில் ஐந்து லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது.

Story first published: Monday, November 25, 2024, 22:20 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+