Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction - முதல் சுற்றில் unsold- ஆன வீரரை கேப்டனாக்க போகும் கொல்கத்தா அணி! சரியான காமெடி!

கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரஹானே தற்பொழுது நடைபெற்ற மெகா ஏலத்தில் முதல் சுற்றில் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் முடிவடையும் நேரத்தில் ரகானேவை அவசரமாக 2 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியது.

இந்த சூழலில் கேகேஆர் அணியில் கடைசி நேரத்தில் வந்த ரஹானேவுக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பு கேகேஆர் அணியால் தரப்பட இருக்கிறது. கே கே ஆர் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

ipl auction 2025 ipl auction ipl 2025

எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த அணியிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயரை, பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து, அவரை கேப்டனாக நியமிக்க உள்ளது. இதனால் கே கே ஆர் அணியின் கேப்டனாக ரிங்கு சிங் செயல்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் ரிங்கு சிங் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் கேப்டனாக இருந்ததில்லை.

இந்த தருணத்தில் ஆண்டிரு ரஸில் சுணில் நரேன் போன்ற வீரர்களுக்கு கேப்டன் பதவி தரலாமா என யோசிக்கப்பட்டது. இந்த தருணத்தில் தான் ரஹானை வை கொல்கத்தா அணி தேர்வு செய்து இருக்கிறது. நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி அணியின் இன்னிங்சை ரஹானே கட்டமைப்பார். தற்போது,கே கே ஆர் அணியில் அனைத்து இடங்களுக்குமே பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் கேப்டனுக்கு தான் சரியான வீரர் இல்லை. இந்த சூழலில் தான் ரஹானேவை கேப்டனாக பயன்படுத்தி வரும் சீசனில் களமிறங்கலாம் என்று கே கே ஆர் நிர்வாகம் முடிவு எடுத்து இருக்கிறது. ரகானவை பொருத்தவரை ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு சீசனில் கேகேஆர் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் தான் அடித்தார்.

2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரஹானே, அபாரமாக செயல்பட்டு சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ரகானே ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகவும் மும்பை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருப்பதால் அவர் கேப்டனுக்கு சரியான தீர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, November 27, 2024, 8:40 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+