Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 -என்ன கொடுமை சார்! தோனியை விட அதிக சம்பளம் வாங்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்

மும்பை : ஐபிஎல் முதல் சீசனில் அதிக சம்பளம் வாங்கிய வீரர்களில் ஒருவராக தோனி விளங்கி வந்தார். தற்போது 17 சீசனங்கள் முடிவடைந்த நிலையில், மற்ற வீரர்களை பணம் கொடுத்து எடுக்க வேண்டும் என்பதற்காக தோனி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டார்.

இதனால் தற்போது தோனிக்கு வெறும் 4 கோடி ரூபாய் தான் சிஎஸ்கே அணியில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தோனியை விட சிஎஸ்கே அணியில் 8 வீரர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். அது யார் என்று தற்போது பார்க்கலாம்.

ipl auction 2025 csk ms dhoni 2025

சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக 2 வீரர்கள் ஒரே அளவில் சம்பளம் வாங்குகிறார்கள். அதன்படி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதேபோன்று சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் 18 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். சிஎஸ்கே அணியில் மூன்றாவது அதிகபட்ச சம்பளம் வாங்கும் வீரராக இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பதிரானா இருக்கிறார்.

பதிரானாவுக்கு சிஎஸ்கே அணி 13 கோடி ரூபாய் தருகிறது. இதேபோன்று சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இதனை அடுத்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் முகமது இருக்கிறார். அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட உள்ளது.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் அஸ்வின் இருக்கின்றார். அஸ்வினுக்கு ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பளம் சிஎஸ்கே அணியால் தரப்பட உள்ளது. இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த கான்வே இருக்கிறார். கான்வேக்கு 6 கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.

இந்தப் பட்டியலில் எட்டாம் இடத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருக்கிறார். அவருக்கு 4 கோடியே 80 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. தோனி பேட்டிங்கில் அதிரடியாக ஆடி வந்தாலும் அவரால் நடுவரிசையில் களமிறங்க முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் தற்போது விக்கெட் கீப்பராக மட்டும் தான் அவர் செயல்படுகிறார். இதனால் தான் தன்னுடைய சம்பளத்தை அவர் குறைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 26, 2024, 18:14 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+