For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலம் 2025 LIVE: முடிந்தது ஏலம்.. 2 நாளில் 182 வீரர்கள் வாங்கப்பட்டனர்

ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளால் 72 வீரர்கள் ரூ.467.95 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். இன்றைய நாளில் 33 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்கு வருகின்றனர். அதன்பின் ஒவ்வொரு அணிகளின் தரப்பில் 25 வீரர்களின் பெயர்கள் கோரப்பட்டு, அவர்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளனர்.

ipl auction 2025  ipl auction                                  2025

Nov 25, 2024, 10:50 pm IST

2 நாட்களாக நடந்த மெகா ஏலத்தில் 182 வீரர்கள் வாங்கப்பட்டனர். மொத்தம் 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவானது.

Nov 25, 2024, 10:35 pm IST

அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

Nov 25, 2024, 9:46 pm IST

ஆண்டிரே சித்தார்த் என்ற வீரரை வாங்கியது சிஎஸ்கே

Nov 25, 2024, 9:44 pm IST

உம்ரான் மாலிக்கை 75 லட்சம் கொடுத்து வாங்கியது கேகேஆர்

Nov 25, 2024, 9:44 pm IST

மோயின் அலியை 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது கேகேஆர்

Nov 25, 2024, 9:33 pm IST

ரஹானேவை ஒன்றரை கோடி கொடுத்து வாங்கிய கேகேஆர்

Nov 25, 2024, 9:31 pm IST

ஸ்ரேயாஸ் கோபாலை 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய சிஎஸ்கே

Nov 25, 2024, 9:30 pm IST

டேவிட் வார்னரை மீண்டும் யாரும் வாங்க முன்வரவில்லை

Nov 25, 2024, 8:38 pm IST

ராமகிருஷ்ணா கோஷ் என்ற வீரரை சிஎஸ்கே அணி 30 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

Nov 25, 2024, 8:15 pm IST

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜெமி ஓவர்டனை வாங்கியது சிஎஸ்கே

Nov 25, 2024, 7:58 pm IST

முஷீர் கானை 30 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

Nov 25, 2024, 7:58 pm IST

சூர்யான்ஷ் ஷேட்கே 30 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்

Nov 25, 2024, 7:58 pm IST

ஷமர் ஜோசப்பை 75 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ அணி

Nov 25, 2024, 7:58 pm IST

அனிகட் வர்மாவை 30 லட்சத்துக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Nov 25, 2024, 7:57 pm IST

ராஜ் பாவாவை 30 லட்சத்துக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

Nov 25, 2024, 7:49 pm IST

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ்-ஐ 2 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே

Nov 25, 2024, 7:48 pm IST

இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ்-ஐ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியது

Nov 25, 2024, 7:48 pm IST

இலங்கை பவுலர் துஷ்மந்த் சமீராவை வாங்கியது டெல்லி கேப்பிடல்ஸ்

Nov 25, 2024, 7:43 pm IST

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல்-ஐ 2.60 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி

Nov 25, 2024, 7:43 pm IST

பிரைடன் கார்ஸ்-ஐ ஒரு கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Nov 25, 2024, 7:43 pm IST

ஆரோன் ஹார்டியை 1.25 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

Nov 25, 2024, 7:36 pm IST

கிருஷ்ணன் ஸ்ரீஜித்தை 30 லட்சத்துக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

Nov 25, 2024, 7:36 pm IST

ப்ரியன்ஷ் ஆர்யாவை 3.80 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

Nov 25, 2024, 7:36 pm IST

மனோஜ் பண்டாகேவை 30 லட்சத்துக்கு வாங்கியது ஆர்சிபி

Nov 25, 2024, 7:35 pm IST

விப்ராஜ் நிகாமை 50 லட்சத்துக்கு வாங்கியது டெல்லி கேப்பிடல்ஸ்

Nov 25, 2024, 7:27 pm IST

இங்கிலாந்து பவுலர் ரீஸ் டாப்லியை மும்பை இந்தியன்ஸ் 75 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 7:27 pm IST

குல்தீப் சென்னை பஞ்சாப் கிங்ஸ் 80 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 7:26 pm IST

மிட்செல் சான்ட்னரை மும்பை இந்தியன்ஸ் அணி 2 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 7:26 pm IST

ஜெயந்த் யாதவை குஜராத் டைட்டன்ஸ் 75 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 7:26 pm IST

ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபாசல்ஹக் ஃபாரூக்கியை ராஜஸ்தான் ராயல்ஸ் 2 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 7:15 pm IST

இந்திய உள்ளூர் வேகப் பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங்கை சிஎஸ்கே அணி 2.20 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 7:14 pm IST

இந்திய உள்ளூர் பந்துவீச்சாளர் அஸ்வனி குமாரை மும்பை இந்தியன்ஸ் அணி 30 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 7:14 pm IST

இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆகாஷ் சிங்கை 30 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

Nov 25, 2024, 6:56 pm IST

ஹர்னூர் சிங்கை 30 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

Nov 25, 2024, 6:55 pm IST

இலங்கை பவுலர் நுவான் துஷாரா-வை ஆர்சிபி அணி 1.60 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:54 pm IST

ஜெயதேவ் உனட்கட் -ஐ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:46 pm IST

ஆஸ்திரேலிய பவுலர் ஸ்பென்சர் ஜான்சனை 2.80 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா

Nov 25, 2024, 6:46 pm IST

இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மமாவை 75 லட்சத்துக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்

Nov 25, 2024, 6:39 pm IST

தமிழக வீரர் சாய் கிஷோரை 2 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்

Nov 25, 2024, 6:39 pm IST

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட்-ஐ 1.50 கோடிக்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Nov 25, 2024, 6:36 pm IST

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி 5.25 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:36 pm IST

ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய்-ஐ பஞ்சாப் கிங்ஸ் 2.40 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:32 pm IST

தீபக் ஹூடாவை 1.70 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே

Nov 25, 2024, 6:31 pm IST

ஷாபாஸ் அஹமதை 1 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

Nov 25, 2024, 6:28 pm IST

ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் டிம் டேவிட்-ஐ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:23 pm IST

குஜராத் டைட்டன்ஸ் அணி ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை 1.50 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:23 pm IST

மனிஷ் பாண்டே-வை கொல்கத்தா அணி 75 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:19 pm IST

திக்வேஷ் சிங்-கை 30 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

Nov 25, 2024, 6:19 pm IST

மணிமாறன் சித்தார்த்-ஐ 75 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ அணி

Nov 25, 2024, 6:12 pm IST

முகேஷ் சவுத்ரியை சிஎஸ்கே அணி 30 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:12 pm IST

கர்னூர் பிராரை குஜராத் டைட்டன்ஸ் அணி 1.30 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:12 pm IST

ஸ்வப்னில் சிங்கை ஆர்சிபி அணி 50 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 6:05 pm IST

அர்ஷத் கானை 1.30 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்

Nov 25, 2024, 6:04 pm IST

இளம் இந்திய வீரர் அன்ஷுல் கம்போஜ்-ஐ சிஎஸ்கே 3.40 கோடிக்கு வாங்கியது

Nov 25, 2024, 5:58 pm IST

இந்திய உள்ளூர் வீரர் ஹிம்மத் சிங்கை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 30 லட்சத்துக்கு வாங்கியது

Nov 25, 2024, 5:56 pm IST

ஷாயிக் ரசிதை சிஎஸ்கே அணி 30 லட்சம் ருபாய்க்கு ஏலம் எடுத்தது

Nov 25, 2024, 4:54 pm IST

ஆஃப்கான் வீரர் அல்லா கசன்ஃபரை ரூ.4.8 கோடிக்கு வாங்கிய மும்பை

Nov 25, 2024, 4:43 pm IST

ஆகாஷ் தீப்பை ரூ.8 கோடிக்கு வாங்கிய லக்னோ அணி

Nov 25, 2024, 4:42 pm IST

சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரை 9.25 கோடிக்கு வாங்கிய மும்பை

Nov 25, 2024, 4:38 pm IST

சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரை வாங்கிய மும்பை

Nov 25, 2024, 4:34 pm IST

ஆர்டிஎம் மூலமாக முகேஷ் குமாரை ரூ.8 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி

Nov 25, 2024, 4:31 pm IST

புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ஆர்சிபி அணி போராடி வாங்கியது

Nov 25, 2024, 4:26 pm IST

ஜெரால்ட் கோட்ஸியை ரூ.2.40 கோடிக்கு வாங்கியது குஜராத் அணி

Nov 25, 2024, 4:25 pm IST

சிஎஸ்கே அணிக்காக விளையாடிய துஷார் தேஷ்பாண்டேவை ரூ.6.50 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி

Nov 25, 2024, 4:11 pm IST

டோனவன் ஃபெரேரா, அலெக்ஸ் கேரி இருவரையும் எந்த அணியும் வாங்கவில்லை

Nov 25, 2024, 4:07 pm IST

ஜோஷ் இங்லிஸை ரூ.2.60 கோடிக்கு வாங்கிய பஞ்சாப் அணி

Nov 25, 2024, 4:04 pm IST

ரியான் ரிக்கல்டனை ரூ.1 கோடிக்கு வாங்கிய மும்பை அணி

Nov 25, 2024, 4:04 pm IST

நிதீஷ் ராணாவை ரூ.4.20 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி

Nov 25, 2024, 3:58 pm IST

க்ருணால் பாண்டியாவை ரூ.5.75 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி

Nov 25, 2024, 3:55 pm IST

சிஎஸ்கே அணிக்காக ஆடிய டேரல் மிட்சலை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை

Nov 25, 2024, 3:54 pm IST

மார்கோ யான்சனை ரூ.7 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்

Nov 25, 2024, 3:51 pm IST

சாம் கரணை 2.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே

Nov 25, 2024, 3:50 pm IST

வாசிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி 3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது

Nov 25, 2024, 3:42 pm IST

சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாக்கூரும் விலை போகவில்லை

Nov 25, 2024, 3:40 pm IST

பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை

Nov 25, 2024, 3:39 pm IST

சிஎஸ்கே வீரர் ரஹானே இம்முறை ஏலம் போகவில்லை

Nov 25, 2024, 3:38 pm IST

டுபிளசிஸ் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

Nov 25, 2024, 3:36 pm IST

முதல் வீரராக ரோமன் போவெல் 1.50 கோடிக்கு கேகேஆர் அணிக்கு ஏலம் போனார்

Nov 25, 2024, 3:35 pm IST

2வது நாள் ஏலம் தொடங்கியது. முதல் வீரராக வந்த வில்லியம்சன் விலை போகவில்லை

Nov 24, 2024, 11:16 pm IST

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் நாளில் 72 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

Nov 24, 2024, 10:35 pm IST

ரஷிக் தாரை 6 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி அணி வாங்கியது

Nov 24, 2024, 9:52 pm IST

சமீர் ரிஸ்வியை டெல்லி கேபிடல்ஸ் அணி 95 லட்சத்துக்கு வாங்கியது.

Nov 24, 2024, 9:52 pm IST

மும்பை அணிக்காக விளையாடிய நெஹல் வதேராவை 4 கோடியே 20 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

Nov 24, 2024, 9:49 pm IST

சிஎஸ்கேக்காக விளையாடிய சமீர் ரிஸ்வியை டெல்லி அணி 95 லட்சம் கொடுத்து வாங்கியது.

Nov 24, 2024, 9:45 pm IST

இளம் வீரர் அபினவ் மனோகரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Nov 24, 2024, 9:33 pm IST

இளம் வீரர் நேஹல் வதேராவை ரூ.4.20 கோடிக்கு வாங்கிய பஞ்சாப் அணி

Nov 24, 2024, 9:02 pm IST

நூர் அஹ்மத்தை ரூ.10 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே அணி

Nov 24, 2024, 8:59 pm IST

ஹசரங்காவை ரூ.5.25 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் அணி

Nov 24, 2024, 8:53 pm IST

இந்திய ஸ்பின்னர் ராகுல் சஹரை ரூ.3.2 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியது

Nov 24, 2024, 8:53 pm IST

ட்ரென்ட் போல்ட்-ஐ ரூ.12.50 கோடிக்கு மும்பை அணி வாங்கியது

Nov 24, 2024, 8:50 pm IST

தமிழக வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது

Nov 24, 2024, 8:34 pm IST

கலீல் அஹ்மத்தை ரூ.4.80 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே

Nov 24, 2024, 8:34 pm IST

ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.12.50 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் அணி

Nov 24, 2024, 8:26 pm IST

அன்ரிக் நார்கியேவை ரூ.6.50 கோடிக்கு வாங்கிய கேகேஆர் அணி

Nov 24, 2024, 8:22 pm IST

அவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கு வாங்கிய லக்னோ அணி

Nov 24, 2024, 8:21 pm IST

பிரசித் கிருஷ்ணாவை ரூ.9.5 கோடிக்கு வாங்கிய குஜராத் அணி

Nov 24, 2024, 8:16 pm IST

ஜோஷ் ஹேசல்வுட்டை 12.50 கோடிக்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

Nov 24, 2024, 8:10 pm IST

இந்திய விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா ரூ.11 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார்

Nov 24, 2024, 7:55 pm IST

விக்கெட் கீப்பர் பில் சால்ட் ரூ.11.5 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார்

Nov 24, 2024, 7:43 pm IST

விக்கெட் கீப்பர் டி காக்கை ரூ.3.6 கோடிக்கு கேகேஆர் அணி வாங்கியது

Nov 24, 2024, 7:27 pm IST

அதிரடி ஆல் - ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் 4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்

Nov 24, 2024, 7:27 pm IST

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் 3.40 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்

Nov 24, 2024, 7:19 pm IST

ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 11 கோடிக்கு வாங்கப்பட்டார்.

Nov 24, 2024, 7:09 pm IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு வாங்கியது.

Nov 24, 2024, 7:07 pm IST

சிஎஸ்கே அணி அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Nov 24, 2024, 6:58 pm IST

சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திராவை 4 கோடிக்கு வாங்கியது.

Nov 24, 2024, 6:51 pm IST

ஹர்ஷல் பட்டேலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 கோடிக்கு வாங்கியது.

Nov 24, 2024, 6:50 pm IST

இளம் ஆஸ்திரேலிய அதிரடி ஜேக் பிரேசர் மெக்கர்க் 9 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

Nov 24, 2024, 6:41 pm IST

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை எந்த அணியும் வாங்கவில்லை.

Nov 24, 2024, 6:41 pm IST

ராகுல் திரிபாதியை சிஎஸ்கே அணி 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Nov 24, 2024, 6:37 pm IST

சிஎஸ்கே அணி டெவான் கான்வே-வை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Nov 24, 2024, 6:37 pm IST

இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்-ஐ ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை.

Nov 24, 2024, 6:21 pm IST

முதல் இரண்டு சுற்றுகளில் அதிக கையிருப்பு இல்லாத காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளால் ஒரு வீரரை கூட வாங்க முடியவில்லை.

Nov 24, 2024, 6:16 pm IST

முதல் இரண்டு சுற்றுகளில் முக்கிய வீரர்கள் பெயர்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சுற்று இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

Nov 24, 2024, 5:35 pm IST

லக்னோ அணிக்காக ஆடிய கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணியும், டெல்லி அணிக்காக ஆடிய ரிஷப் பண்ட்-ஐ ரூ.27 கோடிக்கு லக்னோ அணியும் வாங்கியுள்ளனர்

Nov 24, 2024, 5:23 pm IST

முகமது சிராஜை 12.25 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது

Nov 24, 2024, 5:21 pm IST

ரூ.8.75 கோடிக்கு லியம் லிவிங்ஸ்டனை வாங்கிய ஆர்சிபி அணி

Nov 24, 2024, 5:09 pm IST

சாஹலை 18 கோடி ரூபாய்க்கு எடுத்த பஞ்சாப் அணி

Nov 24, 2024, 5:01 pm IST

டேவிட் மில்லரை ரூ.7.5 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கிய லக்னோ அணி

Nov 24, 2024, 4:55 pm IST

முகமது ஷமியை 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கிய சன்ரைசர்ஸ்

Nov 24, 2024, 4:39 pm IST

27 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ரிஷப் பண்ட். லக்னோ அணி எடுத்தது

Nov 24, 2024, 4:31 pm IST

மிட்செல் ஸ்டார்கை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த டெல்லி அணி

Nov 24, 2024, 4:25 pm IST

ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத்

Nov 24, 2024, 4:19 pm IST

26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய், அதிக விலைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர்

Nov 24, 2024, 4:02 pm IST

ரூ.10.75 கோடிக்கு தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Nov 24, 2024, 3:58 pm IST

ஆர்ஸ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு RTM கார்டு மூலம் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது

Nov 24, 2024, 2:46 pm IST

பஞ்சாப் அணிக்கு விளையாட விரும்பவில்லை.. இருப்பதிலேயே மோசமான அணி அது- கிருஷ்ணப்பா கௌதம் சாடல்

Nov 24, 2024, 1:55 pm IST

ஜியோ சினிமா நடத்திய மாதிரி ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் 21 கோடி ரூபாய் கொடுத்து கே கே ஆர் அணி வாங்கி இருக்கிறது.

Nov 24, 2024, 1:20 pm IST

ஜியோ சினிமா நடத்திய மாதிரி ஏலத்தில் கே எல் ராகுலை ஆர் சி பி அணி 29 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

Nov 24, 2024, 12:38 pm IST

ஜியோ சினிமா நடத்திய மாதிரி ஏலத்தில் பஞ்சாப் அணி ரிஷப் பண்டை 33 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

Nov 24, 2024, 11:50 am IST

ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் பிளாக்லிஸ்ட் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மெகா ஏலத்தின் விதியை மாற்ற குரல் கொடுத்ததால் அணிகள் அதிருப்தி

Nov 24, 2024, 11:50 am IST

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 110.5 கோடி மீதத் தொகை இருக்கிறது. அதற்கு அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 83 கோடி மீதத் தொகை உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முக்கிய வீரர்களை வாங்குவதில் கடும் போட்டி நிலவக் கூடும்.

Nov 24, 2024, 11:31 am IST

ரிஷப் பண்ட் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். அவரை வாங்க மிகப் பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் 110.50 கோடி கையிருப்பு இருக்கும் நிலையில், அந்த அணி அவரை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

Nov 24, 2024, 10:28 am IST

2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார். அதன்பின் அடுத்த 9 சீசன்களாக வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிய அஸ்வின், தனது கடைசி ஐபிஎல் பயணம் சிஎஸ்கே அணிக்காக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இதனால் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணியால் வாங்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Nov 24, 2024, 9:50 am IST

சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 69 கோடி மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி பஞ்சாப் கிங்ஸ் - 110.50 கோடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ் - 41 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி

Story first published: Sunday, November 24, 2024, 9:38 [IST]
Other articles published on Nov 24, 2024
English summary
IPL 2025 Auction (ஐபிஎல் ஏலம்) LIVE News Updates in Tamil: Follow our IPL Auction 2025 LIVE blog for real-time updates in tamil including team-wise ipl players list, highest bid players, sold & unsold players, foreign and Uncapped players list with prize money details, remaining purse left with each IPL teams and much more. Stay updated with every moment on IPL Auction with myKhel Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+