Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL auction- நன்றாக ஏமாந்த மும்பை அணி! இப்படி ஒரு குறை இருக்கும் வீரருக்கு 9.25 கோடி தந்த அம்பானி

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மூன்று சீசன்களில் மொத்தமாகவே 18 போட்டிகள் விளையாடிய சிஎஸ்கே வீரத் தீபக்சாகருக்கு ஒன்பது கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்து ஏமாந்து இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளராக தீபக்சாகர் விளங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக தீபக் சாஹர் விளையாடி வருகிறார். எனினும் தீபக்சாகர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு அபாரமாக விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ipl auction 2025 csk mi deepak chahar 2025

அதன் பிறகு அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு சென்னை அணி தீபக்சாகரை எடுத்தாலும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு தீபக்சாகர் மீண்டும் அணியில் இடம் பிடித்து அபாரமாக பந்து வீசி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தொடரில் இருந்து முக்கிய காலகட்டத்தில் காயம் காரணமாக விலகினார். அந்த சீசனில் அவர் வெறும் 10 போட்டிகளில் தான் விளையாடினார்.

இதை தொடர்ந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2024 ஆம் ஆண்டு சீசனில் தீபக்சாகர் சிஎஸ்கே அணிக்கு விளையாடினார். ஆனால் அப்போதும் முக்கிய காலகட்டத்தில் காயம் காரணமாக விலகினார். எட்டு போட்டிகளில் ஐந்து விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் தீபக்சாகர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த சூழலில் தீபக்சாகரை வாங்க மும்பை அணியும் பஞ்சாப் அணியும் போட்டி போட்டுக் கொண்டது.

ஒரு கட்டத்தில் மும்பை அணி தீபக்சாஹரை வாங்க ஆர்வம் காட்டிய போது சிஎஸ்கே அணி திடீரென்று புகுந்து எட்டு கோடி தருவதாக கூறியது. அப்போது மும்பை அணி மீண்டும் தீபக்சாகருக்கு அதிக சம்பளம் தருவதாக கூறி ஒன்பது கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணி தீபக் சாருக்கு ஒன்பது கோடி ரூபாய் வரை கொடுக்க முன் வந்தது.

எனினும் தீபக்சாகர் சென்னை அணி விட்டு சென்றது நல்ல விஷயம் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக அவர் கடந்த காலங்களில் நன்றாக உழைத்தாலும் தற்போது அவர் அடிக்கடி காயம் ஏற்பட்டு முக்கிய கட்டத்தில் காலை வாருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். தீபக்சாகருக்கு இப்படி ஒரு குறை இருப்பதை தெரியாமல் 9 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி அவரை வாங்கி இருப்பதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Monday, November 25, 2024, 17:14 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+