Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம்- சிஎஸ்கே, மும்பை கிடையாது! முதல் நாள் முடிவில் பலமான அணிகள் இவை தான்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது முடிவடைந்து உள்ள நிலையில், இரண்டாவது நாள் ஏலம் திங்கட்கிழமை மதியம் மூன்று முப்பது மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் இரண்டாவது நாள் ஏலத்தில் 10 அணிகளிடம் எவ்வளவு பணம் கையிருப்பு இருக்கிறது. இன்னும் எத்தனை வீரர்களை அவர்கள் வாங்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.இரண்டாவது நாள் மெகா ஏலத்தில் அதிகபட்சமாக rcb அணியிடம் 30 கோடியே 65 லட்சம் ரூபாய் கையிருப்பில் இருக்கிறது.

ipl auction 2025 csk mi ipl auction 2025

இதில் அவர்கள் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் உட்பட 16 வீரர்களை வாங்க வேண்டும். இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அவர்களிடம் 26 கோடியே 10 லட்சம் ரூபாய் கையிருப்பு இருக்கின்றது. மொத்தமாக அவர்கள் ஏழு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 16 வீரர்களை வாங்க வேண்டும். பஞ்சாப் அணியிடம் 22 கோடியே 50 லட்சம் ரூபாய் இருக்கிறது.

அவர்களிடம் ஆறு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 பேரை வாங்க வேண்டும். குஜராத் அணியிடம் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் இருக்கிறது. அவர்கள் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் உட்பட 11 வீரர்களை வாங்க வேண்டும். ராஜஸ்தான் அணியிடம் 17 கோடியே 35 லட்சம் இருக்கிறது. அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 14 வீரர்களை வாங்க வேண்டும்.

சி எஸ் கே அணியிடம் 15 கோடி 60 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 வீரர்களை வாங்க வேண்டும். லக்னோ அணியிடம் 14 கோடியே 85 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 வீரர்களை வாங்க வேண்டும். டெல்லி அணியிடம் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது.

அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 12 வீரர்களை வாங்க வேண்டும் கே கே ஆர் அணியிடம் 10 கோடியே 5 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது. அவர்கள் மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட 12 வீரர்களை வாங்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணியிடம் குறைந்தபட்சமாக 5 கோடியே 15 லட்சம் ரூபாய் தான் இருக்கிறது. அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 12 வீரர்களை வாங்க வேண்டும்.

Story first published: Monday, November 25, 2024, 7:57 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+