Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

33 கோடி ரூபாய்க்கு சென்ற ரிஷப் பண்ட்.. ராகுலை வாங்கிய RCB! ஜியோ சினிமா நடத்திய மாதிரி ஏலம்

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 3:30 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு அணியினரும் ஐபிஎல் மெகா ஏலத்திற்காக சிறந்த முறையில் தயாராகி இருக்கின்றது.

தங்களுக்கு எந்த வீரர்கள் தேவைப்படும் ஒருவேளை வீரர்கள் கிடைக்கவில்லை என்றால் மாற்று வீரர்கள் யார் என்பது குறித்து எல்லாம் 10 அணிகளும் தங்களது பட்டியலை தயார் செய்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில் ஜியோ சினிமா ஐபிஎல் மாதிரி ஏலம் ஒன்றை நடத்தியது.

ipl auction 2025 ipl auction ipl 2025

இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 33 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்றார். இந்த ஏலத்திலே அதிக தொகையை வைத்திருந்த பஞ்சாப் அணி மாதிரி ஏலத்தில் 33 கோடி கொடுத்து ரிஷப் பண்டை வாங்கி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுலை ஆர்சிபி அணி 29 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. ஆர்சிபி அணிக்காக ஏற்கனவே ராகுல் விளையாடிய நிலையில் அவரை மாதிரி ஏலத்தில் வாங்கி இருக்கிறார்கள்.

இதேபோன்று கேகேஆர் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் 21 கோடி ரூபாய் கொடுத்து கேகேஆர் அணியை ஏலத்தில் வாங்கி இருக்கிறது. கேகேஆர் அணியிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயரை மாதிரி ஏலத்தில் நடந்தது போல் மெகா ஏலத்திலும் கேகேஆர் அணிக்கே செல்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேபோன்று டெல்லி அணி 15 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து அதிரடி வீரர் இசான் கிசனை வாங்கி இருக்கிறது. இதேபோன்று அனுபவ வீரர் சாஹலை 15 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி மாதிரி ஏலத்தில் வாங்கி இருக்கிறது.ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி மாதிரி ஏலத்தில் 18 கோடி ரூபாய் கொடுத்து மிட்செல் மார்சலை வாங்கி இருக்கின்றது.

இந்த மாதிரி ஏலத்தில் நிகழ்ந்தது போலவே உண்மையான மெகா ஏலத்திலும் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். மெகா ஏலத்தை போல் மாதிரி இடத்திலும் சிஎஸ்கே அணி பெரிய வீரர்களை யாரும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 24, 2024, 13:01 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+