Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ரிஷப் பண்ட், ராகுல், ஸ்ரேயாஸ் அடிப்படை விலை என்ன? முழு விவரம்

மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1574 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஏலம் பல அணிகளுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பஞ்சாப்,கொல்கத்தா, ஆர்சிபி நடப்பு சாம்பியன் கே கே ஆர்,டெல்லி ஆகிய ஐந்து அணிகள் தங்களுடைய கேப்டனை விடுவித்து இருப்பதால் இந்த மெகா ஏலத்தில் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க இருக்கின்றார்கள். இந்த மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்,ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் அதிக அளவுக்கு விற்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ipl 2025 ipl auction 2025 csk mi

பஞ்சாப் அணி 110 கோடி ரூபாயுடன் ஏலத்தில் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணி 83 கோடி ரூபாயும், குஜராத் 69 கோடி ரூபாயும், சிஎஸ்கே 55 கோடி ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் 45 கோடி ரூபாயுடன் ஏலத்தில் பங்கேற்கிறது.இந்த நிலையில், மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அடிப்படை விலை தற்போது வெளியாகி உள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்.

ரூ. 2 கோடி : ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, கலீல் அகமது, தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், இஷான் கிஷன், முகேஷ் குமார், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, டி நடராஜன், தேவ்தத் பாடிக்கல் , ஹர்ஷல் படேல்,

அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஜானி பேர்ஸ்டோவ், ககிசோ ரபாடா, மார்க் வூட், கஸ் அட்கின்சன்

ரூ.1.25 கோடி: ஜேம்ஸ் ஆண்டர்சன்

75 லட்சம்: சர்பராஸ் கான் மற்றும் பிரித்வி ஷா

ஏலத்திற்கு முன்பு மொத்தமாக உள்ள வீரர்கள் பட்டியலில் இருந்து சிலர் அதிரடியாக நீக்கப்படுவார்கள். அப்போது, பிசிசிஐ ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அடிப்படை விலையை நிர்ணயித்து இருக்கிறார்கள் என்பதை அறிவிக்கும்.

Story first published: Wednesday, November 6, 2024, 16:38 [IST]
Other articles published on Nov 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+