ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிக தொகையுடன் பங்கேற்க உள்ளது. அந்த அணியில் ஏலத்திற்கு முன் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்? விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார்? அந்த அணியிடம் இருக்கும் மீதத் தொகை எவ்வளவு? மற்றும் ஆர்டிஎம் அட்டை எண்ணிக்கை எத்தனை? ஆகியவை குறித்து இங்கே பார்க்கலாம்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்த வீரர்கள் :
விராட் கோலி - 21 கோடி
ரஜத் படிதார் - 11 கோடி
யாஷ் தயாள் - 5 கோடி

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவித்த வீரர்கள் :
ஃபாப் டூ பிளசிஸ், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (ஓய்வு பெற்றுவிட்டார்), சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், சவுரவ் சவுகான், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, கேமரான் கிரீன், ஸ்வப்னில் சிங், மயங்க் தாகர், மனோஜ் பன்டாகே. ஆகாஷ் தீப், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ், டாம் கர்ரன், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, விஜய்குமார் வைஷாக், ராஜன் குமார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மீதத் தொகை :
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 83 கோடி மீதத் தொகை உள்ளது. ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகளில் இதுவே இரண்டாவது அதிக தொகை ஆகும்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் உள்ள ஆர்டிஎம் எண்ணிக்கை :
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் மூன்று ஆர்டிஎம் அட்டை உள்ளது. ஒரு அணி மொத்தமாக அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது தக்க வைக்கப்படாத இடங்களுக்கு ஈடாக .ஒரு ஆர்டிஎம் அட்டையை பெறலாம். ஆர்சிபி அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்ததால் மீதமுள்ள மூன்று இடங்களுக்கு ஈடாக மூன்று ஆர்டிஎம் அட்டைகளை பெற்றுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறி இருந்தது. எனினும், அந்த அணி மெகா ஏலத்திற்கு முன் மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவர் மட்டுமே அந்த அணியில் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்காக மொத்தம் 37 கோடி ரூபாயை அந்த அணி செலவிட்டு உள்ளது.
அதிகபட்சமாக விராட் கோலிக்கு 21 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு இருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் முகமது சிராஜ் ஆர்சிபி அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதே போல கிளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், கேமரான் கிரீன், ஃபாப் டூ பிளசிஸ் ஆகிய வீரர்களும் நீக்கப்பட்டு உள்ளனர். ஆர்சிபி அணி ஐபிஎல் ஏலத்தில் கே எல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற முக்கிய இந்திய வீரர்களை வாங்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.