Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம்- சிஎஸ்கேக்கு திரும்பிய இரட்டை சதம் விளாசிய 20 வயது வீரர்.. வாய்ப்பு தருவாரா தோனி?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 வயது வீரரான ஷாயிக் ரஷீதை, சிஎஸ்கே அணி அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. 2022 அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக களம் இறங்கிய ஷாயிக் ரஷீத் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அரை சதம் விளாசி புகழின் உச்சிக்கு சென்றார்.

அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாய் ரஷீத் கானை ஏலத்தில் வாங்கியது. மேலும் சிஎஸ்கே அணிக்காக அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் சில போட்டிகளில் சப்ஸ்டியூட்டாக வந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

ipl auction 2025 csk shaik rasheed 2025

இந்த தருணத்தில் சாயிக் ரஷீதை பேட்டிங்கிலும் சிறந்த வீரராக முன்னேறி வருகிறார். அண்மையில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ஷாயிக் ரஷீத், இரட்டை சதம் விளாசி அசத்தினார். அது மட்டும் இல்லாமல் தற்போது பந்துவீச்சிலும் ஷாயிக் ரஷீத் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சூழலில் ஷாயிக் ரஷீத் பெயர் வந்த உடனே சிஎஸ்கே அணி அவரை அடிப்படை விலைக்கு வாங்கிக் கொண்டது. இதன் மூலம் ஷாயிக் ராஷீத் சிஎஸ்கே வின் எதிர்கால திட்டத்திற்கு சிறந்த வீரராக இருப்பார். எப்படி சிஎஸ்கே அணியில் பத்ரிநாத் போன்ற வீரர்கள் நடு வரிசையில் களமிறங்கி அணியை சரிவிலிருந்து காப்பாற்றுவாரோ, அதேபோல் ஒரு வீரராக சாயிக் ரஷீத் விளங்குவார்.

ஆனால் ஷாயிக் ரஷீத்தை சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் வாய்ப்பு தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் இம்முறையாவது சிஎஸ்கே அணி ஷாயிக் ரஷீத்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிஎஸ்கே அணியில் தற்போது வெளிநாட்டு பேட்ஸ்மேன் நடு வரிசையில் இல்லை.

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி ஷாயிக் ரஷீத்தை களம் இறக்கி வாய்ப்பு கொடுத்தால் தன்னுடைய திறமையை நிரூபிக்க அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கிடைக்கும். சிஎஸ்கே அணியில் பலவீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சிலே அமர்ந்து வீணாகி சென்று இருக்கிறார்கள். அந்த பட்டியலில் ஷாயிக் ரஷீத்தும் சேர்ந்து விடக்கூடாது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Story first published: Monday, November 25, 2024, 18:50 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+