Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம் 2025- அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள் யார்? மொத்தமாக எவ்வளவு பணம் செலவானது?

ஜெட்டா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. இதில் பத்து அணிகளும் இணைந்து மொத்தமாக மெகா ஏலத்தில் 182 வீரர்களை வாங்கியிருக்கிறார்கள்.

இதில் வெளிநாட்டு வீரர்களை சேர்ந்தவர்கள் 62 பேர் ஆகும். மொத்தமாக எட்டு ஆர்டிஎம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்குப் போன டாப் 10 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ipl auction 2025 ms dhoni 2025

இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்டை லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். அவரை 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியிருக்கிறது. மூன்றாவது இடத்தில் வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார். அவரை 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கே கே ஆர் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார்.

இந்த பட்டியலில் ஆர்ஸ்தீப் சிங் நான்காவது இடத்தில் இருக்கிறார். பஞ்சாப் அணி இவரை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இதேபோன்று சாஹ்ல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவரையும் 18 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. ஆறாவது இடத்தில் ஜாஸ் பட்லர் இருக்கிறார். பட்லரை 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கொடுத்து குஜராத் அணி வாங்கியிருக்கிறது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் அதிக விலைக்குப் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ஜாஸ் பட்லர் பெற்றிருக்கிறார். ஏழாவது இடத்தில் கே எல் ராகுல் இருக்கின்றார். ராகுல் 14 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். எட்டாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் இருக்கின்றார். பவுல்ட் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி வாங்கியிருக்கின்றது.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் இருக்கின்றார். ஆர்ச்சரை 12 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியிருக்கிறது. இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் இருக்கிறார். 12 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஆர்சிபி அணி ஹேசல்வுட்டை வாங்கி இருக்கின்றது.இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதுக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறது.

Story first published: Monday, November 25, 2024, 23:21 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+