Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - சிஎஸ்கே குடும்பத்தில் சேர்ந்த 23 வயது வீரர்.. சந்தோஷத்தில் திக்கு முக்காடிய நண்பர்கள்

சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட அன்ஷுல் கம்போஜின் மாநில அணியை சேர்ந்த சக வீரர்கள் மற்றும் நண்பர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் 2025 ஐபிஎல் மகா ஏலத்தில் 30 லட்சம் என்ற அடிப்படை விலையுடன் பங்கேற்றார். அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவளை 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

ipl auction 2025 csk ipl 2025 2025 2025

ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அன்ஷுல் கம்போஜ் ஹரியானா மாநில அணி வீரர்களுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஏலத்தை அவர் தனது மொபைல் போனில் நேரலையில் பார்த்து வந்தார். அவருடன் இருந்த நண்பர்கள் அன்ஷுல் கம்போஜ் பெயர் அறிவிக்கப்பட்டபோது உற்சாகத்துடன் அவர் எத்தனை விலைக்கு செல்கிறார்? என ஆர்வமாக பார்த்து வந்தனர்.

அவரது விலை கோடிகளை எட்டியவுடன் அவர்கள் உற்சாகத்தில் இருந்தனர். சிஎஸ்கே 3.40 கோடிக்கு அவரை வாங்கியவுடன் அவர்கள் பேருந்தில் பெரும் உற்சாக குரல் எழுப்பினார்கள். அன்ஷுல் கம்போஜ் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக உருவெடுத்து வருகிறார்.

அவர் சமீபத்தில் ரஞ்சி ட்ராஃபியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளராகவும் இருந்தார். அடுத்து விஜய் ஹசாரே ட்ராபியில் அவர் பத்து போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார். மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இதன் காரணமாக அன்ஷுல் கம்போஜ்-ஐ வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியாக அவரை 3.40 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

Story first published: Friday, November 29, 2024, 15:20 [IST]
Other articles published on Nov 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+