Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - ஓவர்நைட்டில் கோடீஸ்வரர் ஆன கிரிக்கெட் வீரர்கள்.. இந்த வருஷத்தை மட்டும் மறக்கவே முடியாது

மும்பை: 2024 ஆம் ஆண்டு பல உள்ளூர் இந்திய வீரர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறி உள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் இதுவரை லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்த சில வீரர்கள் கோடிகளில் சம்பளத்தை பெற்றுள்ளனர்.

இதுவரை ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெறாத சில வீரர்களும், இதுவரை இலட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்த சில வீரர்களும் 2025 ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் வாழ்வும் தலைகீழாக மாறி உள்ளது.

ipl auction 2025 year ender 2024 ipl 2025 2025 2025

2024 ஆம் ஆண்டில் புதிய பணக்காரர்களாக மாறிய வீரர்கள் யார்? என்று பார்க்கலாம். இந்திய அணி விக்கெட் கீப்பராக சில போட்டிகளில் ஆடிய ஜித்தேஷ் சர்மா 2025 ஐபிஎல் ஏலத்தில் 11 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் சம்பளமாக 20 லட்சம் மட்டுமே பெற்று வந்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியால் முப்பது லட்சத்துக்கு வாங்கப்பட்டார். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 10 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற்றார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.

IPL Auction: ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட 182 வீரர்கள் பட்டியல்.. விலை, அணி மற்றும் முழு விவரம்

கடந்த காலத்தில் 30 லட்சம் என்ற அடிப்படையில் விலையுடன் விளையாடிய குர்ஜப்நீத் சிங்கை இந்த முறை 2.20 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. இதுபோல மேலும் சில வீரர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். அவர்களின் பட்டியல் -

அசுதோஷ் சர்மா - 3.80 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்

நெஹால் வதேரா - 4.20 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

அபினவ் மனோகர் - 3.20 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

விஜயகுமார் வைஷாக் - 1.80 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

வைபவ் அரோரா - 1.80 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சிமர்ஜீத் சிங் - 1.50 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

யாஷ் தாக்கூர் - 1.60 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

சுயாஷ் சர்மா - 2.60 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அன்ஷுல் கம்போஜ் - 3.40 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

அர்ஷத் தான் - 1.30 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

கர்னூர் பிரார் - 1.30 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

நமன் திர் - 5.25 கோடி - மும்பை இந்தியன்ஸ்

பிரயன்ஷ் ஆர்யா - 3.80 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

அங்க்ரிஷ் ரகுவன்ஷி - 3 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அப்துல் சமத் - 4.20 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரஷீத் தார் - 6 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Story first published: Monday, December 9, 2024, 16:28 [IST]
Other articles published on Dec 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+