Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: 30.50 கோடிக்கு விலை போன ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன்.. மாதிரி ஏலத்தில் நடந்த சம்பவம்

அபுதாபி: 2026 ஐபிஎல் மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு 'மாதிரி ஏலத்தில்' ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் 30.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய இந்த மாதிரி ஏலத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 10 அணிகளின் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர். இதில் சுரேஷ் ரெய்னா - சிஎஸ்கே, ராபின் உத்தப்பா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), அனில் கும்ப்ளே - ஆர்சிபி ஆகியோர் அந்தந்த அணிகளுக்காக ஏலம் கேட்டனர்.

IPL Auction 2026 Cameron Green Smashes 30 50 Crore Record in IPL Mock Auction KKR Outbids Rivals

கேமரூன் கிரீனுக்கு ஜாக்பாட் - கேகேஆர் அதிரடி

இந்த மாதிரி ஏலத்தின் மிகப்பெரிய ஹைலைட் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் தான். அதிக கையிருப்புத் தொகையை வைத்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கேமரான் கிரீனை வாங்கக் கடும் போட்டி போட்டது. இறுதியில் ரூ.30.50 கோடிக்கு ராபின் உத்தப்பா அவரை ஏலத்தில் எடுத்தார்.

உண்மையான ஏலத்தில் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு விலை போனதே சாதனையாக உள்ளது. ஆனால் மாதிரி ஏலத்தில் அந்தச் சாதனையை கிரீன் முறியடித்துள்ளார். உண்மையான ஏலத்தில் இப்படி நடைபெறுமா? என்ற கேள்வியும் உள்ளது.

சிஎஸ்கே யாரை வாங்கியது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகப் பங்கேற்ற சுரேஷ் ரெய்னா, சில விவேகமான தேர்வுகளை மேற்கொண்டார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹாரை ரூ.10 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக அவர் வாங்கினார். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜேவை ரூ.7.5 கோடிக்கு வாங்கினார் ரெய்னா.

அதிரடி வீரர் சர்ஃபராஸ் கான் மற்றும் இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரையும் சேர்த்து வெறும் 9 கோடிக்குள் ரெய்னா தூக்கினார். சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் டெவோன் கான்வே மாதிரி ஏலத்தில் விலை போகவில்லை.

வெங்கடேஷ் ஐயருக்குச் சறுக்கல்

கடந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்குப் போன வெங்கடேஷ் ஐயர், இந்த மாதிரி ஏலத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெறும் 6 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இது அவருக்கு 17.75 கோடி ரூபாய் நஷ்டமாகும்.

அதிக விலை போன டாப் 5 வீரர்கள் (மாதிரி ஏலம்):

கேமரூன் கிரீன் - ரூ. 30.50 கோடி (KKR)

லியம் லிவிங்ஸ்டோன் - ரூ. 19 கோடி (LSG)

மதீஷா பதிரானா - ரூ. 13 கோடி (KKR)

ரவி பிஷ்னாய் - ரூ. 11.50 கோடி (RR)

ராகுல் சஹார் - ரூ. 10 கோடி (CSK)

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டேவிட் மில்லரை ரூ.9.5 கோடிக்கும், பிரித்வி ஷாவை ரூ.2.75 கோடிக்கும் வாங்கியது. மாதிரி ஏலத்திலேயே இவ்வளவு அனல் பறந்தால், இன்று நடக்கும் உண்மையான ஏலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Story first published: Tuesday, December 16, 2025, 8:05 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+