Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போடு வெடிய.. இனி ஜடேஜா இடத்தில் இவர்தான்.. விலையை ஏற்றி விட்ட SRH.. போட்டி போட்டு வாங்கிய CSK

அபுதாபி: ஐபிஎல் ஏலம் என்றாலே சென்னை அணி பெரும்பாலும் சீனியர் வீரர்களைத்தான் ஏலம் எடுத்து வருவார்கள் என்று ஒரு பேச்சு இருக்கும். ஆனால் 2026 மினி ஏலத்தில் சென்னை அணி ஒரு இளம் வீரருக்காக இத்தனை கோடிகள் வரை போட்டி போட்டது பலரது கவனத்தை ஈர்த்தது. பிரஷாந்த் வீர் என்ற இளம் வீரருக்காக ரூபாய் 14.20 கோடிகளை செலவிட்டுள்ளது சென்னை அணி. அதற்கு மிகவும் முக்கியமான காரணம் உள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த இந்திய அணிக்கு தேர்வாக இந்திய ஆல்ரவுண்டர்களுக்கான ஏலச் சுற்றில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர்க்காக பல அணிகள் போட்டி போட்டது. தொடக்கத்தில் அவரது அடிப்படை விலையில் அவரை வாங்க லக்னோ அணி முன் வந்தது. அதன் பின்னர் மும்பை ஆர்வம் காட்டியது. ஆனால் போதிய பணம் இல்லாததால் மும்பை ஒரு கோடியே 40 லட்சம் வரை கேட்டு விட்டு அமைதியாகிவிட்டது.

IPL Auction 2026 Chennai Super Kings Buyed 14 20 Cr Prashant Veer For Replace Ravindra Jadeja
Photo Credit:

விலையை ஏற்றிவிட்ட ஹைதராபாத்: அதன் பின்னர் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் போட்டி போட்டனர். அதில் சென்னை அணி பிரஷாந்த் வீரை ரூபாய் 14 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியது. இவரை சென்னை அணி வாங்க இவ்வளவு தீவிர ஆர்வம் காட்ட காரணமே, பிரசாந்த் வீர், சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா இடத்தை பிரஷாந்த் வீர் நிரப்புவார் என்ற நம்பிக்கையில் தான்.

ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றா?: ரவீந்திர ஜடேஜாவை போல பிரஷாந்த் வீரும் இடது கை பேட்ஸ்மேன், அதுவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். மேலும் சுழற்பந்து வீச்சாளர். எனவேதான் சென்னை அணி இவரை இத்தனை கோடிகள் செலவு செய்து வாங்கி உள்ளது. இவர் உள்ளூர் டி20 போட்டிகளில், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் பிகார் அணிக்கு எதிராக உத்தர பிரதேச அணிக்காக 26 பந்தில் 40 ரன்கள் குவித்திருந்தார்.

Story first published: Tuesday, December 16, 2025, 17:31 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+