Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction:இறுதி கட்டத்தில் பட்டையை கிளப்பிய சிஎஸ்கே அணி..2 தரமான பவுலர்களை வாங்கி குறையை தீர்த்தது

அபுதாபி: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களிடம் இருந்த இரண்டு குறையை தீர்த்துக் கொண்டது. சிஎஸ்கே அணியில் இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடத்திற்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருந்தது.

இந்த ஏலத்தில் அகில் ஹூசேன், பிரசாந்த் வீர் உள்ளிட்ட வீரர்களை வாங்கியது. எனினும் கூடுதலாக ஒரு இந்திய சுழற் பந்துவீச்சாளரும் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரும் சிஎஸ்கே அணிக்கு தேவைப்பட்டார்கள்.

Rahul chahar

இந்த தருணத்தில் ஐபிஎல் ஏலத்தின் இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணி தங்களிடம் இருந்த பணத்தை சிறப்பாக பயன்படுத்தியது. குறிப்பாக தீபக் சாகரின் தம்பியான ராகுல் சாகர் சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருடைய பெயர் முதலில் வந்தவுடன் சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணியும் அவரை எடுக்கவில்லை.

இதனை அடுத்து இரண்டாவது முறையாக அவருடைய பெயர் ஏலம் மேடைக்கு வந்தது. அப்போது சிஎஸ்கே அணி அவரை ஆர்வமாக ஏலத்தில் எடுத்தது. இதனால் அவருடைய விலை ஐந்து கோடியே 20 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. தற்போது சிஎஸ்கே அணி அவரை எடுத்திருப்பதன் மூலம் சுழற்பந்து வீச்சு பலமாக மாறி இருக்கிறது.

ராகுல் சாகர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நல்ல ரெகார்டை வைத்திருப்பதால் இது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.

மார்க் ஹென்றி நல்ல உயரமான வீரர். இதன் மூலம் பவுன்சை அவரால் எந்த மைதானத்திலும் பெற முடியும். 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசக்கூடிய மேட் ஹென்றியை சிஎஸ்கே அணி தற்போது தேர்வு செய்திருக்கிறது. இதே போன்று நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் Zak Foulkes இதன் மூலம் சிஎஸ்கே அணியின் உள்ள அனைத்து குறையும் தீர்க்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Tuesday, December 16, 2025, 21:04 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+