Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026 ஏலம்.. சிஎஸ்கே அணி முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரை வாங்கியது.. யார் இந்த ஹீசைன்

அபுதாபி: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த ஆல் ரவுண்டர் அகில் ஹூசேனை வாங்கியுள்ளது. சர்வதேச அனுபவம் கொண்ட வீரராக இருந்தாலும், அவர் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளையாடி இருந்திருக்கிறார்.

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 16 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருக்கிறார். சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கருதப்படும் அக்கில் உசேன் சர்வதேச t20 கிரிக்கெட்டில் 87 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Akeal Hosain

பேட்டிங்கில் 293 ரன்கள் அடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அக்கேல் ஹூசைன் உலகம் முழுவதும் பல டி20 அணிகளில் விளையாடிருக்கிறார். 253 டி20 போட்டிகளில் விளையாடி 237 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 1096 ரன்கள் அடித்திருக்கிறார்.

இடது கை சுழற் பந்துவீச்சாளரான அகேல் ஹூசைன் பவர்பிளேவில் பந்து வீசக் கூடியவர். 2020 ஆம் ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கீழ் வரிசையில் களமிறங்கி 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்து இருக்கின்றார்.அகேல் ஹுசைன் திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் அவருடைய முழு திறன் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு சி எஸ் கே அணி அவரை வாங்கி உள்ளது.

Story first published: Tuesday, December 16, 2025, 16:30 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+