IPL 2026 ஏலம்.. நம்பர் 6வது இடத்தில் களமிறங்க தரமான ஆஸி. வீரரை வாங்கிய சிஎஸ்கே.. 2 முறை MVP விருது வாங்கியவர்
அபுதாபி: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது நடு வரிசையில் விளையாடுவதற்காக ஒரு சிறந்த ஆஸ்திரேலியா வீரரை வாங்கி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே அணி கடந்த இரண்டு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்ததற்கு காரணம் பேட்டிங் சரியாக இல்லாததுதான்.
குறிப்பாக டாப் வரிசை மற்றும் நடு வரிசையில் சரியான வீரர்கள் களமிறங்கவில்லை. சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் நம்பி தேர்வு செய்த டேரல் மிச்சல், விஜய் சங்கர், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் காலை வாரியதால் சிஎஸ்கே அணி தடுமாறியது. தற்போது சிஎஸ்கே அணியில் நடு வரிசையில் பிரவீஸ் சிவம் துபே உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த தருணத்தில் கூடுதலாக ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன் இருந்தால் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ சார்ட்டை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. வலது கை அதிரடி பேட்ஸ்மேனான இவர் ஆஃப் ஸ்பின்னையும் வீசுவார்.
இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறது. இதுவரை 140 டி20 போட்டிகளில் விளையாடி 3431 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் 23, அரைசதம் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147 என்ற அளவில் இருக்கின்றது. அதேபோன்று பந்துவீச்சில் 55 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருக்கிறார். குறிப்பாக பிக் பேஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்டரைக்கர்ஸ் அணி வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக அவர் இருந்து வருகிறார்.
கடந்த நான்கு சீசனங்களில் இரண்டு முறை எம்விபி எனப்படும் மோஸ்ட் வால்யூபில் பிளேயர் என்ற விருதை வென்றுள்ளார். இதனால் ஷார்ட் பெயர் வந்தவுடன் அவரின் அடிப்படை விலையான ஒன்றரை கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி வாங்கியது. இது சிஎஸ்கே அணியின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கை என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். 4, 5, 6 என பேட்டிங் வரிசையில் மூன்று இடத்திலும் விளையாடக் கூடியவர். 30 வயதான மேத்தியூ ஷார்ட், சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகாலம் கூட விளையாட வாய்ப்பு உடையவர்.


Click it and Unblock the Notifications