Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே வீரர்களின் முழு சம்பள பட்டியல்.. தோனியை விட அதிக சம்பளம் வாங்கும் 8 வீரர்கள்

அபுதாபி: ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏலம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அபுதாபியில் நடந்து முடிந்துள்ளது. கடந்த சீசனில் (2025) புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்பிடித்து ரசிகர்களை ஏமாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ், இம்முறை ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

முக்கியமாக "தல" தோனி 4 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அடிப்படை விலையான 30 லட்சம் கொண்ட இளம் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சிஎஸ்கே வீரர்கள் யார், அவர்களின் சம்பளம் என்ன? என்று பார்க்கலாம்.

டிசம்பர் 16ம் தேதி நடந்த ஐபிஎல் ஏலத்தின் முடிவில் கையில் வெறும் 2.40 கோடியை மட்டும் வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட 25 வீரர்களை அணிக்குள் எடுத்துள்ளது சிஎஸ்கே. கடந்த முறை ஏற்பட்ட சறுக்கலை சரி செய்ய, இம்முறை இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து 'ட்ரேட்' முறையில் வாங்கப்பட்ட சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா ரூ.18 கோடி சம்பளத்துடன் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். 2025 உள்நாட்டு கிரிக்கெட்டில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, 180+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சஞ்சு சாம்சனின் வருகை சிஎஸ்கே பேட்டிங்கை பலமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL Auction 2026 CSK Players Salary from Sanju Samson Dhoni Ruturaj to uncapped players

யார் இந்த பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா?

ஏலத்தில் எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது இரண்டு பெயர்கள் தான். ஒன்று பிரசாந்த் வீர், மற்றொன்று கார்த்திக் சர்மா. இவர்கள் இருவருமே சர்வதேச போட்டிகளில் ஆடாத "அன்கேப்ட்" வீரர்கள். இவர்களின் அடிப்படை விலை வெறும் 30 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், சிஎஸ்கே இவர்களை தலா ரூ.14.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டரான பிரசாந்த் வீர், சமீபத்திய ரஞ்சி போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும் 300 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சு மற்றும் லோயர் ஆர்டர் பேட்டிங் திறமைக்காக இவரை சிஎஸ்கே தூக்கியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மா, மிடில் ஓவர்களில் அதிரடி காட்டுவதில் வல்லவர்.

இவர்களைத் தவிர, அதிரடி மன்னன் சிவ துபே ரூ.12 கோடிக்கும், சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது ரூ.10 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், நாதன் எல்லிஸ், அகில் ஹொசைன் ஆகியோர் அணியில் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை கலீல் அகமது, ராகுல் சஹார் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் அணியின் பலத்தை கூட்டுகின்றனர்.

தற்போது உள்ள 25 பேர் அடங்கிய சிஎஸ்கே வீரர்கள் பட்டியலில் எட்டு வீரர்கள் தோனியை விட அதிக சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வீரர்களின் முழு சம்பள பட்டியல்:

ஐபிஎல் 2026 சீசனுக்கான சிஎஸ்கே வீரர்களின் சம்பள விவரம் பின்வருமாறு:

சஞ்சு சாம்சன் - ரூ. 18 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் - ரூ. 18 கோடி
பிரசாந்த் வீர் - ரூ. 14 கோடியே 20 லட்சம்
கார்த்திக் சர்மா - ரூ. 14 கோடியே 20 லட்சம்
சிவ துபே - ரூ. 12 கோடி
நூர் அகமது - ரூ. 10 கோடி
ராகுல் சஹார் - ரூ. 5 கோடியே 20 லட்சம்
கலீல் அகமது - ரூ. 4 கோடியே 80 லட்சம்
எம்.எஸ். தோனி - ரூ. 4 கோடி
அன்ஷுல் கம்போஜ் - ரூ. 3 கோடியே 40 லட்சம்
குர்ஜப்னீத் சிங் - ரூ. 2 கோடியே 20 லட்சம்
டெவால்ட் பிரேவிஸ் - ரூ. 2 கோடியே 20 லட்சம்
நாதன் எல்லிஸ் - ரூ. 2 கோடி
அகில் ஹொசைன் - ரூ. 2 கோடி
மேட் ஹென்றி - ரூ. 2 கோடி
மேத்யூ ஷார்ட் - ரூ. 1 கோடியே 50 லட்சம்
ஜேமி ஓவர்டன் - ரூ. 1 கோடியே 50 லட்சம்
சர்பராஸ் கான் - ரூ. 75 லட்சம்
சாக் ஃபோல்க்ஸ் - ரூ. 75 லட்சம்
அமன் கான் - ரூ. 40 லட்சம்
ஸ்ரேயாஸ் கோபால் - ரூ. 30 லட்சம்
ஆயுஷ் மத்ரே - ரூ. 30 லட்சம்
ராமகிருஷ்ண கோஷ் - ரூ. 30 லட்சம்
உர்வில் படேல் - ரூ. 30 லட்சம்
முகேஷ் சவுத்ரி - ரூ. 30 லட்சம்

Story first published: Thursday, December 18, 2025, 11:37 [IST]
Other articles published on Dec 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+