Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK பிளேயிங் XI இப்போவே பலமா இருக்கு.. இன்னும் 2 வீரர்களை எடுத்தால் போதும்- RCB EX கோச் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமான அணியாக விளங்குவதாக ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியிடம் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ள நிலையில் அந்த அணிக்கு நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஒன்பது வீரர்கள் மொத்தமாக தேவைப்படுகிறார்கள்.

இந்த சூழலில் சிஎஸ்கே அணி வெறும் இரண்டு வீரர்களை வாங்கினாலே, அந்த அணி பலம் அதிகரித்து விடும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சிஎஸ்கே அணி கடந்த சீசனில் தங்களுடைய அணியை பலமாக கட்டமைத்து விட்டது.

CSK

தாங்கள் பிளே ஆப்க்கு செல்லமாட்டோம் என்று தெரிந்த உடனே,தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதன் மூலம் ஆயுஷ் மாத்ரேவை அவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள். அவர் பிளேயிங் லெவனனில் கண்டிப்பாக இடம் பெறுவார்.

என்னைக் கேட்டால் அவர் மூன்றாவது வீரராக களம் இறங்க வேண்டும். சஞ்சு சாம்சன், ருதுராஜ் தொடக்க வீரராக விளையாட வேண்டும் நான்காவது இடத்திற்கு பிரவீஸ் மற்றும் சிவம் துபே என இரண்டு பேரும் சிறப்பான பணியை செய்வார்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும்.

இதன் மூலம் நான்காவது இடத்திற்கு ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி வாங்க வேண்டும். அந்த இடத்திற்கு லியாம் லிவிங்ஸ்டோன் ஒரு நல்ல சாய்ஸாக இருப்பார். இதேபோன்று கேமரூன் கிரீனை கூட சிஎஸ்கே அணி அந்த இடத்தில் பயன்படுத்தி பார்க்கலாம். ஏனென்றால் அவர்களிடம் தற்போது அதிக பணம் என்று இருக்கிறது.

பந்துவீச்சில் சிஎஸ்கே அணி நாதன் எல்லீஸ் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அவர் புதிய பந்தில் சிறப்பாக செயல்படுவார். நல்ல ஃபீல்டரும் கூட எனவே சிஎஸ்கே அணியில் அவர் தொடர்ந்து இடம்பெறக்கூடும். சிஎஸ்கே அணி கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒரு வெளிநாட்டு ஆல் ரவுண்டர் ஆகியோரை தேர்வு செய்வதன் மூலம் அந்த அணியின் பலம் மேலும் அதிகரிக்கும் என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 14, 2025, 11:43 [IST]
Other articles published on Dec 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+