Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026 ஏலத்தில் சிஎஸ்கே இந்த உலகின் முன்னாள் நம்பர் 1 பவுலரை எடுக்கனும்.. பத்ரிநாத் கருத்து

சென்னை: 2026 ஐபிஎல் ஏலத்தில் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்யை சிஎஸ்கே வாங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் வலியுறுத்தியுள்ளார்.25 வயதான பிஷ்னோய், 2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், கடந்த ஐபிஎல் மற்றும் இந்திய டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி, 2023 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.அஷ்வின் ஓய்வு, ஜடேஜா இல்லாத நிலையில் சிஎஸ்கே சுழற்பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது. இந்த சூழலில் பிஷ்னோய் சிறந்த தேர்வாக இருப்பார் என்று பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் விளக்கினார்.

CSK

இது குறித்து பேசிய அவர், "அவர் ஒரு சிறந்த வாய்ப்பு, சிஎஸ்கே நிச்சயம் குறிவைக்கும். ஜடேஜா, அஷ்வின் இல்லாத நிலையில், அவர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர் தேவை. பிஷ்னோய் நான்கு ஓவர்கள் வீசக்கூடிய பவுலர். சேப்பாக்கம் மைதானத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்."

"நூர் அகமதுடன் பிஷ்னோய் சேர்க்கை சிறப்பாக இருக்கும். விலைக்குப் போனாலும் சிஎஸ்கேவுக்கு பலன் கிடைக்கும்" என்று பத்ரிநாத் தெரிவித்தார். இதே போன்று ஏலத்தில், சுழற்பந்துவீச்சுடன், கடைசி ஓவர் பந்துவீச்சிலும் சிஎஸ்கே கவனம் செலுத்த பத்ரிநாத் வலியுறுத்தினார். ஆன்ரிச் நோர்க்யே, ஜெரால்ட் கோட்ஸி, மதீஷா பதிரனா ஆகியோரில் ஒருவரை கைபற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "சிஎஸ்கேவுக்கு நிச்சயம் டெத் பவுலர் தேவை. நோர்க்யே ஒரு அதிவேக பந்துவீச்சாளர்; புதிய பந்தில், கடைசி ஓவர்களில் வீசக்கூடியவர். கோட்ஸி ஒரு நல்ல தேர்வு, அவர் முன்பு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடியவர். கடந்த ஏலத்திலும் சிஎஸ்கே அவரை வாங்க முயன்றது".

"பதிரனாவை குறைந்த விலைக்குத் திரும்ப வாங்குவதோ அல்லது இந்த மூவரில் ஒரு டெத் பவுலரைத் தேர்வு செய்வதோ சிஎஸ்கேவுக்கு அவசியம். இதே போன்று பேட்டிங்கில் மில்லர் கடைசி ஓவர்களில் பயமுறுத்தும் இடது கை பேட்ஸ்மேன். சுழற்பந்துவீச்சுக்கு எதிராகவும் நன்றாக விளையாடுகிறார்."

"தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நெருங்குபவர் போலத் தோன்றினாலும், ஷேன் வாட்சன், ராபின் உத்தப்பா, அஜிங்க்யா ரஹானே போன்றோர் சிஎஸ்கே-வில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். மில்லர் நிச்சயம் சிஎஸ்கேவுக்குக் கச்சிதமாகப் பொருந்துவார்" என்று பத்ரிநாத் கூறினார். ஐபிஎல் 2026 ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.

Story first published: Sunday, December 7, 2025, 22:04 [IST]
Other articles published on Dec 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+