Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றிலேயே நடைபெற்ற தரமான 5 சம்பவங்கள்.. டாப்பில் இந்தியர்கள் இருப்பதை கவனிங்க

அபுதாபி: 2026 ஆம் ஆண்டு ஐபிஎல்-லுக்கான மினி ஏலம் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகளும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்து தங்களது அணிகளை வலுப்படுத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த மினி ஏலத்திலேயே மூன்று தரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்துடன் சேர்த்து மொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணிக்காக மிட்ஷெல் ஸ்டார்க் ரூபாய் 24.75 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இது அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையாக பார்க்கப்பட்டது. அதே ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை ஹைதராபாத் அணி 20.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதே வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களாக இருந்தார்கள்.

ஆனால் இவர்களின் சாதனையை தற்போது கேமரூன் கிரீன் முறியடித்து விட்டார். அவரை 2026 மினி ஏலத்தில் ஹைதராபாத் அணி 25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனால் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரராகவும், ஆஸ்திரேலிய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அதேபோல் இலங்கையைச் சேர்ந்த மதிஷா பத்திரனா ரூபாய் 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர்தான் அதிக விலைக்கு ஏலம் போன இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார்.

IPL Auction 2026 Details About Top 5 Players Who are Sold Big Bid Rishabh Pant to Venkatesh Iyer

இந்திய வீரர்கள்: மேலும் இந்த ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த உள்நாட்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இருந்த கார்த்திக் சர்மா மற்றும் பிரஷாந்த் வீர் என இரண்டு வீரர்களையும் தலா ரூபாய் 14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் பட்டியலில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களாக இவர்கள் உருவெடுத்துள்ளார்கள்.

இப்படி இருக்கும்போது, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 5 வீரர்கள் இவர்கள்தான்.

1.ரிஷப் பந்த் - ₹27.00 கோடி (LSG, IPL 2025)
2. ஸ்ரேயாஸ் ஐயர் - ₹26.75 கோடி (PBKS, IPL 2025)
3.கேமரூன் கிரீன் - ₹25.20 கோடி (கேகேஆர், ஐபிஎல் 2026)
4.மிட்செல் ஸ்டார்க் - ₹24.75 கோடி (கேகேஆர், ஐபிஎல் 2024)
5.வெங்கடேஷ் ஐயர் - ₹23.75 கோடி (கேகேஆர், ஐபிஎல் 2025).

Story first published: Tuesday, December 16, 2025, 20:08 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+