Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இன்ஸ்டாகிராம் மூலம் ஏலத்தில் இடம்பிடித்த வீரர்.. ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு ஏலத்தில் 369 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு பெயர் என்றால் அது இஸ்சாஸ் சவாரியா தான். சமூக வலைத்தளம் தற்போது வளர்ந்து வரும் நிலையில் அதை பயன்படுத்தி பலர் தங்களது திறமையை உலகத்திற்கு வெளிகாட்டுகிறார்கள்.

இதன் மூலம் தங்களுக்காக வாய்ப்புகளை உருவாக்கி மேன்மை அடைகிறார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் இஸ்ஸாஸ் சவாரியா. ஏனென்றால் இவர் ஒரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடியது கிடையாது. ஆனால் இன்ஸ்டாகிராமில் பந்து வீசி அதனை வீடியோவாக எடுத்து போட்டு இருக்கிறார்.

Izaz sawariya

இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் கவனத்தைப் பெற்று இருப்பதன் மூலம் தற்போது ஒரு ஐபிஎல் அணியை அவருடைய பெயரை ஏலத்தில் பதிவு செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்சாஸ் சவாரியா, சிஎஸ்கே அணி என்னை தொடர்பு கொண்டு இரண்டு முறை பேசி இருக்கிறது.

இதேபோன்று சுனில் ஜோசி சார் எனது பந்துவீச்சு வீடியோவை பார்த்து, எனது போன் நம்பரை வாங்கினார். அதன் பின் பஞ்சாப் அணி என்னை சோதனைக்கு அழைத்தது, அதன் பின் லக்னோ அணியும் என்னை அழைத்து எனது திறமையை பரிசோதித்தார்கள். எனது பந்துவீச்சை பார்த்து அவர்கள் கவர்ந்து விட்டார்கள்.

தற்போது எனது பெயரை அவர்களை நிரப்பி ipl ஏலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒருவேளை இன்றைய ஐபிஎல் ஏலத்தில் நான் தேர்வு செய்யப்பட்டால், சமூக வலைத்தளம் மூலம் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை நான் பெறுவேன்.

தற்போது என்னை பார்த்து பலரும் சமூக வலைத்தளத்தில் பந்து வீசி வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இந்த ட்ரெண்ட் என்னால் ஆரம்பித்தது என்று நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன் என்று சவாரியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த சவாரியா வீடியோவை இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர் ஆதில் ரசித் லைக் செய்து பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 16, 2025, 13:00 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+