Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026 ஏலம்: ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீனை 25.20 கோடி கொடுத்து வாங்கியது KKR.. விலையை ஏற்றிய CSK

அபுதாபி: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு மினி ஏலத்தில் எதிர்பார்த்தப்படியே ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீனை பல்வேறு அணிகள் போட்டி போட்டு வாங்கியது. அபுதாபியில் தொடங்கிய இந்த ஏலத்தில் 369 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஏலம் தொடங்கிய உடன் முதல் வீரராக ஆஸ்திரேலிய அணியின் ஜெக் பிரேசர் வந்தார் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து பிரித்திவிஷா பெயரும் வந்தது. அவரையும் இந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வரவில்லை.

Cameron green

இந்த சூழலில் கேமரன் கிரீன் பெயர் வந்தவுடன் மும்பை அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டது. அதன் பின் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் கடும் போட்டி போட்டது. இதனால் கேமரான் கிரீன் விலை இரண்டு கோடி ரூபாயிலிருந்து 13 கோடி 60 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் கே கே ஆர் அணி கேமரன் கிரீனை வாங்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று சீனுக்குள் நுழைந்த சிஎஸ்கே அணி கேமரான் கிரீனை அபார வேலை கொடுத்து கேட்க முயற்சித்தது.

இதனால் கேமரான் கிரீன் விலை மேலும் உயர்ந்து கொண்டே சென்றது கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணியிடம் அதிக பணம் இருந்ததால், இரு அணிகளும் கடுமையாக போட்டி போட்டது. இதன் காரணமாக அவருடைய விடை 20 கோடி ரூபாயை தாண்டி சென்றது. இருவரும் விடாப்படியாக விலையை கேட்டு போட்டி போட்டதால் அவருடைய விலை 25 கோடியை தொட்டது. 25 கோடியே 20 லட்சம் ரூபாய் கொல்கத்தா அணி கேட்டது. இதை அடுத்து, சிஎஸ்கே இந்த போட்டியில் இருந்து விலகியது.

இதன் மூலம் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கேமரன் கிரீனை கொல்கத்தா அணி வாங்கியது. ஆனால் அவருக்கு 18 கோடி ரூபாய் கிடைக்கும். எஞ்சிய பணம் பிசிசிஐக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை ஐபிஎல் தொடரில் 29 போட்டிகளில் விளையாடி 707 ரன்களையும்,ஒரு சதம் இரு அரை சதமும் கேமராம்களின் அடித்துள்ளார். பந்து வீச்சில் 29 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Tuesday, December 16, 2025, 15:06 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+